நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன் நீலகிரி மாவட்டம், கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன இணைந்து கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாமினை இந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜா, சுகாதார ஆய்வாளர் மோகன், ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கவிமதி முகாமினை துவக்கி வைத்தார்.
உதகை அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் ராம்குமார் தலைமையில் கண் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண் பரிசோதனை செய்து பயனடைந்தர். கண் புரை அறுவை சிகிச்சைக்கு 35 பேர் தேர்வு செய்து உதகை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் கௌரி சங்கர், செவிலியர் பரமேஸ்வரி, பத்மா, கர்த்தனா மேரி வனிதா, சங்கீதா, கவிதா, ஜென்சி, கௌதமி, நந்தினி, கயல், ஆஷா பணியாளர்கள் அஸ்மாபி, நௌசந்தி பொன்னம்மாள், ஜெயலஷ்மி, சுசீலா, நுகர்வோர் மைய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment