செம்பகொல்லி பகுதியில் சாலை வசதி அமைத்து தரவில்லை எனில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாப்பிற்குட்பட்ட செம்பகொல்லி பகுதியில் ஆதிவாசி கிராமம் உள்ளது. இந்தப் பகுதி அடர்ந்த வனப்பகுதியாக விடுதலைகள் இங்கிருந்து பாஸ்பர பகுதிக்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ளது. மேலும் இப் பகுதிகள் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல மக்கள் மூன்று கிலோ மீட்டர் நடந்தே பாஸ்பரா பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டமும் உள்ள நிலையில் கடந்த மே 15ஆம் தேதி இங்கு வசித்து வரும் குட்டன் என்பவர் காட்டு யானை தாக்கிய உயிரிழந்தார். அப்போது அப்பகுதி ஆதிவாசி மக்கள் கூடலூர் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் சாலை வசதியும் காட்டி யானைகளின் அச்சுறுத்தலும் உள்ளதால் அவர்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப அச்சமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்
இதனை அடுத்து அவர்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு வனத்துறை வாகனம் மூலமாக அழைந்து செல்வதாகவும் சாலை வசதி செய்து தருவதாகவும் உறுதி அளிக்கப்பட்டு அவரது குழந்தைகள் தற்போது வரை வனத்துறை வாகனம் மூலமாக பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் ஆனால் இதுவரை சாலை அமைக்கும் பணியானது தாமதப்படுத்தப்பட்டே வருகிறது. எனவே இதனை வலியுறுத்தி ஆதிவாசி மக்கள் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதனை யடுத்து வனத்துறையினர் மற்றும் தேவர்சோலை பேரூராட்சி துணை தலைவர் உள்ளிட்டோர் செம்பகொல்லி அங்கன்வாடி மையத்தில் சென்று அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து அவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை தள்ளி வைப்பதாகவும் இருப்பினும் தொடர்ந்து சாலை வசதி அமைப்பது தாமதமானால் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment