பான் - ஆதார் இணைக்காத நபர்களுக்கு என்ன சிக்கல்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 July 2023

பான் - ஆதார் இணைக்காத நபர்களுக்கு என்ன சிக்கல்? அடுத்து என்ன செய்ய வேண்டும்?


 பான் - ஆதார் இணைக்காத நபர்களுக்கு என்ன சிக்கல்? அடுத்து என்ன செய்ய வேண்டும்?


பான் கார்டை (PAN - Permanent Account Number) ஆதாருடன் இணைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை நீண்டகாலமாக நாம் கேட்டு வருகிறோம். ஆனால் உங்களில் எத்தனை பேர் இதைச் செய்திருக்கிறீர்கள்?


ஒருவேளை நீங்கள் இதுவரை உங்களது பான் கார்டை , ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், என்ன விளைவுகள் ஏற்படும்?


மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஜூன் 30, 2023ஆம் தேதியை பான்-ஆதார் இணைப்பிற்கான கடைசி காலக்கெடுவாக அறிவித்திருந்தது.


அதாவது ஜூன் 30ஆம் தேதிக்குள் உங்களுடைய பான் எண்ணை ஆதாருடன் இணைக்காமல் விட்டிருந்தால் ஜூலை 1ஆம் தேதி, 2023 முதல் உங்கள் பான் எண் செயலிழந்துவிடும்.


இதன் காரணமாக, பான் எண் தேவைப்படும் வங்கி உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். மேலும் உங்களது பணப் பரிவர்த்தனைகளிலும் சிக்கல் ஏற்படலாம்.


பான் - ஆதார் இணைக்கவில்லை என்றால் என்ன சிக்கல்?


பான்-ஆதார் இணைக்காத ஒருவர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது.


நிலுவையில் உள்ள வருமான வரி கணக்கைச் செயல்படுத்த முடியாது.


செயலிழந்துவிட்ட பான் எண்ணைக் கொண்டிருக்கும் நபரின், நிலுவையில் உள்ள வருமான வரியைத் திருப்பி செலுத்தும் முறை செயல்படுத்தப்படாது.


தவறான அல்லது பிழையுடன் இருக்கக்கூடிய வருமான வரி அறிக்கையை மாற்றுவது தொடர்பான, செயல்முறையை மேலும் தொடர முடியாது.


பான் எண் செயலிழந்துவிட்டால், அதிக விகிதத்தில் வரி கழிக்கப்படும்

வங்கி தொடர்பான பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது.

KYCக்கு பான் எண் அவசியம்.


பான் கார்டு செயலிழந்துவிட்டால் என்ன செய்வது?

ஒருவரின் பான் செயலிழந்தால், அவர் தனது பான் எண்ணை மீண்டும் செயல்பட வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மார்ச் 28, 2023 தேதியிட்ட அறிவிப்பில் தெளிவுப்படுத்தியுள்ளது.


அதன்படி, ரூ.1000 அபராதம் செலுத்தி உங்களின் பான் எண்ணை மீண்டும் செயல்பட வைக்கலாம். எனினும், நீங்கள் எந்த தேதியில் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கிறீர்களோ அதில் இருந்து 30 நாட்களுக்கு பின்னரே உங்களின் பான் எண் மீண்டும் செயல்பட தொடங்கும். எடுத்துக்காட்டாக ஜூலை 5ஆம் தேதி நீங்கள் லீங்க் செய்தால் ஆகஸ்ட் 5ஆம் தேதி உங்கள் பான் மீண்டும் செயல்பட தொடங்கும்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad