நீலகிரி மாவட்டம்.. பந்தலூரில் வனத்துறை அமைச்சர் தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்கூட்டம் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைப்பெற்றது
பந்தலூர் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் தொழிற்சங்கங்க நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைப்பெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன் தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்வு வழங்கவேண்டும், தொழிலாளர்கள் தற்போது வாங்கி வரும் ஊதியத்தை விட நாள் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தி வழங்கவும், களமேற்பார்வையாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.150 அதிகமாகவும் வழங்கவேண்டும், 2022 மே மாதம் முதல் பணி நிறுத்திவைத்துள்ள 530 தற்காலிக தொழிலாளர்களுக்கு உடனடியாக பணி வழங்கவேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மற்றும் வனத்துறை அமைச்சருக்கு புகார் மனு அனுப்பிது தொடர்பாக மனு கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள் மேற்படி தொழிற்சங்கங்களை சார்ந்த பிரதநிதிகளை நேரடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் தவறும் பட்சத்தில் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் டேன்டீயில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அனுப்பிய புகாரை தொடர்ந்து தொழிற்சங்கத்தினரை அழைத்து நேற்று தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட கலைக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்,முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சுப்ரத் முகபத்ரா ,டேன்டீ பொதுமேலாளர் அசோக்குமார்,முன்னால் பொதுமேலாளர் ஜெயராஜ், மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்கார்,மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர். வனத்துறை அமைச்சர் கூறுகையில் டேன்டீ தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தல் போன்ற கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். டேன்டீ தொழிலாளர்களும் டேன்டீ நிறுவனம்
வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.மேலும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.கூட்டத்தில் கூடலூர் கோட்டாட்சியர் முகமது குதரதுல்லா,நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் பிரான்சீஸ் சேவியர்,தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி,டேன்டீ கோட்ட மேலாளர்கள் சிவகுமார், ஸ்ரீதர்,புஸ்பராணி முன்னால் எம்எல்ஏ திராவிடமணி,தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம் .நகர செயலாளர் சேகர்,ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தராஜா, சுஜேஷ்,தொழிற்சங்க தலைவர்கள் சுப்பிரமணியம் பிடபில்யூசி,எல்பிஎப் துணை பொதுச்செயலாளர் மாடசாமி,சிஐடியூசி ரமேஷ்,ஏஐடியூசி ராஜீ,ஐஎன்டியூசி யோவநாதன் மற்றும் வனத்துறை அலுவலர்கள், டேன்டீ தோட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் கலந்துகொண்டனர்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment