தேவாலா பகுதியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 7 July 2023

தேவாலா பகுதியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்...



தேவாலா பகுதியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்...


    நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் PRCC தார் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. தேவாலா அருகே இயங்கி வரும் தனியார் தார் கலவை ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக, அங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இதனால், ஆலையை வேறு இடத்துக்கு மாற்ற கோரி அப்பகுதி மக்கள் பல காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் இன்றைய தினம் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் ஆலை செயல்பட திமுக அரசு துணைபோவதாக திமுக அரசை கண்டித்தும் தேவாலா பகுதியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பொன் ஜெயசீலன் மற்றும் நகர அதிமுக கழக செயலாளர் DLS பா ராஜா ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு..

No comments:

Post a Comment

Post Top Ad