நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அருகாமையில் உள்ள அவலாஞ்சி பகுதியில் 204mmமழை அளவு பதிவாகியுள்ளது இதனால் எமரால்டு அவலாஞ்சி சாலையில் டபுள் கட்டிங் அருகில் சுமார் 70 அடி உயரமுள்ள கற்பூர மரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் அவலாஞ்சி முதல் உதகை செல்லும் காலை 6.30 மணி பேருந்து பதியிலே நிறுத்தபட்டது.
தகவலின் பெயரில் உடனடியாக அங்கு விரைந்த முள்ளிகூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பிரேமா ராதாகிருஷ்ணன் மற்றும் அவலாஞ்சி மின்துறை மற்றும் வனத்துரை ஊழியர்கள் கொட்டும் மழையையும் பலத்த காற்றையும் பொருட்படுத்தமல் மரத்தை மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் கத்திகளை கொண்டு வெட்டி சாலையை சீரமைத்தனர். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை சீராக போராடி வருகின்றனர் இவர்களின் இந்தப் பணியை எமரால்டு சுற்றுவட்டார பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment