நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூரை அடுத்துள்ள எருமாடு பகுதியில் இயங்கி வரும் கனிவுபெயின்அன்பாலியேட்டிவ்கெயர் என்ற அமைப்பு மனநல மருத்துவமனை பொது மக்கள் சேவைக்காக புதிதாக திறக்கப்பட்டது .
இந்த கனிவுபெயின் பாலிட்டிவ்கேர் மையத்தை ஒரு சிறிய அறை போல் வைத்து துவங்கப்பட்டது இந்த மையம் அப்பகுதி மக்களுக்கு என்னற்ற மருத்துவ உதவிகளை செய்து வந்தது .இந்த மையம் விரிவு படுத்த முடியாத நிலையில் இருந்த போது எருமாடு பகுதியை சேர்ந்த லட்சுமிகுட்டி ஆசிரியர் தன் சொந்த பணமான எட்டு லட்ச மதிப்பீட்டில் நிலத்தை வாங்கி தந்தார் .
பின்பு இதனை கனிவு பெயின் மையம் புதிதாக கட்டி செயல்பட்டு வந்தது இங்கு பல்வேறு பகுதியில் இருந்து மருத்துவம் பார்க்க வருவார்கள் வறுமையில் வாடும் ஆதரவற்றோர் படுத்தபடுக்கையாக உள்ள நோயாளிகள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதுகு தண்டுவடம். பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரம்ஒரு முறை மையத்திலும் வாரம் ஒரு முறை அவரது வீட்டிலும் மருத்துவர்கள் செவிலியர்கள் சென்று அவர்களை பரிசோதிப்பார்கள் .
அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரை இலவசமாக வழங்குவதோடு உணவு உடை தண்ணீர். காற்று நிரப்பும் மெத்தைகள் .சக்கர வண்டி.ஊன்றுகோல். பிராணவாயுக்கானசிலின்டர். கட்டில் மற்றும் மாற்றுத்திரனாளிக்கான அனைத்து உபகரணங்கள் வழங்கப்படுகிறது..
மேலும் இந்த மையம் சிறப்பாக செயல் படுவதற்கு இப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மாணவர்கள .ஆட்டோஓட்டுனர்கள். சுமை தூக்குபவர்கள். ஆசிரியர்கள். போன்றோர்கள் நிதிகளை வாரி வழங்கி வருகின்றனர்.
இன்னிலையில் இதன் பத்தாம் ஆண்டு இன்று கொண்டாடப்பட்டு தற்போது மனநிலை தடுமாறிய நோயாளிக்கான சிகிச்சை மையம் துவங்கப்பட்டது.
.இந்த விழாவிற்கு கனிவு மையத்தின் என்ஆர் அப்துல்மஜித் தலைமையேற்றார் வந்தோர்களைஜோசப் வரவேற்றார். கனிவு மையத்தின் தலைவர் பாலன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழப்பாளர் லட்சுமிகுட்டி ஆசிரியர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்அனிபா மாட்டர்.சேரங்கோடு பஞ்சாயத்து தலைவர் சந்திரபோஸ் ரஷீத்கமல்.ஆலியார். உறுப்பினர்கள்.. பாலன். என் ஆர் அப்துல்மஜீத் .ரசிதுகமலா.ஜோய்.உமர்.டென்னி சாஜி.சாஜன்.இப்ராஹிம். முஹம்மதுகுட்டி. அன்வர் மற்றும் பொது மக்கள் சமுக ஆர்வலர்கள் கலந்துக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment