கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை யில் உள்ள செயின்ட் செபாஸ்டியன் பள்ளி வழாகத்தில் வைத்து ஸ்ரீமதுரை ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் சார்பாகவும். மகளிர் சுய உதவிக்குழு சார்பாகவும் சீனிவாசா சேவைகள் அறக்கட்டளை . மேப்பாடி மூபன்ஸ் மருத்துவமனை இனைந்து மருத்துவ முகாம் நடத்தப்பட்டது இதில் பல்வேறு தரப்பு மக்கள் பயன் பெற்றனர்...
கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை யில் உள்ள செயின்ட் செபாஸ்டியன் பள்ளி வழாகத்தில் வைத்து மருத்துவ முகாம் நடை பெற்றது இந்த முகாமிற்கு ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில் தலைமை தாங்கினார். யூனியன் கவுன்சிலர் கங்காதரன் சீனிவாசா சேவை அறக்கட்டளை கள இயக்குனர் சுந்நர்ராஜன்.செயின்ட் செபாஸ்டியன் பள்ளி தாலாளர் ஸ்டெல்லா. மேப்பாடி மூப்பன் மருத்துவமனையில் பொது மேலாளர் சூபி . ஸ்ரீஜா ..ஸ்ரீஜேஸ்.கவுன்சிலர் சத்தியன். சுல்தான். சுய உதவி குழு தலைவி கீதா.செனிபர். சித்ரா .பிந்து.டிரவர் யூனியன் மோகன் போன்றோர் வாழ்த்துரை வழங்கினர். மற்றும் கவுன்சிலர் தன்னார்வலர்கள் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்..
இந்த முகாமில் பொது மருத்துவம்.எலும்பியல் . மகப்பேறு அறுவை சிகிச்சை .கண்.காது .மூக்கு. தொண்டை. போன்ற தலை சிறந்த மருத்துவர்களை கொண்டு சிகிச்சை வழங்கப்பட்டது. கூட்டத்தில் ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில் கூறுகையில் காப்பீட்டு திட்டம் என்பது ஏழை எளிய மக்கள் தங்களுக்கு ஏற்படும் உயர் சிகிச்சை பெற முடியாத சூலழில் பாதிக்கப்படுவர்க்கு சிகிச்சை பெறவே கலைஞர் கருனாநிதி ஐயா அவர்களால் இந்த காப்பீடுதிட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த காப்பீடு அடையாள அட்டையை தமிழக முழுவது வழங்கப்பட்டது. இன்னிலையில் நீலகிரி மாவட்ட மக்கள் தங்கள் உயர் சிகிச்சை பெற கோவை ஈரோடு திருப்பூர் போன்ற இடங்களில் உள்ள மருத்துவ மனைக்கு அதிக பணம் செலுத்தி சிகிச்சை பெற போதிய பணம் கட்ட முடியாமல் கஸ்டப்படும் மக்களுக்கு பயன் பெறும் வகையில் இந்த காப்பீடு திட்டம் இப்பகுதி மக்களுக்கு கிடைக்க மாவட்ட செயலாளர் பரிந்துறைப்படி இந்த காப்பீடு திட்டம் வழங்கப்பட்டது.
அன்டை மாநிலமான கேரளாவிலும் செல்லுபடியாகும் வகையில் விம்ஸ் மூப்பன்ஸ் மருத்துவ மனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனால் கூடலூர் பந்தலூர் மக்கள் அன்டை மாநிலமான கேரளாவிற்கு சென்று உயர் சிகிச்சை பெறுகின்றனர் என்றார் இன்னிலையில் தற்போது மூப்பன்ஸ் மருத்துவமனை தற்போது சிகிச்சை பெறுவர்கள் சிகிச்சை பலன் இன்றி இரக்கப்படுகிறார்கள் என்று சில சமுக விரோதிகள் வாட்சப்பில் தவரான கருத்தை பரப்பி வருகின்றனர் என கூறினார்.
இதற்கு மூப்பன்ஸ் மருத்துவ மனை பொதுமேலாளர்கள் இந்த கருத்து தவரானது எனவு இது போன்ற சம்பவங்களை நேரிடாது பார்த்துக் கொள்வதாக முகாமில் மக்கள் முன் கூறினார்..இந்த மருத்துவ முகாமினை மூப்பன்ஸ் மருத்துவ மேனேஜர் ஸ்ரீஜித் ஏற்பாடு செய்திருந்தார் முகாமில் முன்னூறுக்கு மேற்பட்டோர் பயன்பெற்றனர்.இறுதியாக கூடலூர் டிரைவர்ஸ் யூனியன் முன்னால் தலைவர் மோகன் நன்றி கூறினார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment