கூடலூர் அடுத்துள்ள நாடுகானி பகுதியில் இயங்கி வரும் உயர்ந்த உள்ளம் நண்பர்கள் குழு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பணமுடிப்பு வழங்கி பாராட்டினர்..
கூடலூரை அடுத்துள்ள நாடுகானி பொன்னூர் பகுதியில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் வைத்து நடந்து முடிந்த அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக் நாடுகானி பகுதியில் செயல்பட்டு வரும் உயர்ந்த உள்ளம் நண்பர்கள் குழு சார்பாக வெற்றி பெற்ற தனுசியா.சுருதி.அஞ்சலி.போன்ற மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பணமுடிப்பு வழங்கி பாராட்டினர்..
இந்த நிகழ்ச்சிக்கு உயர்ந்த உள்ளம் நண்பர்கள் குழு தலைவர் அசோக் தலைமை தாங்கினார் .நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கலைவானி.உதவி ஆசிரியர் ரஹீம். பூங்குழலி.முன்னால் மாணவர்கள் .உயர்ந்த உள்ளம் நண்பர்கள் அமைப்பின் பொறுப்பாளர்கள் பெற்றோர்கள் கிராம மக்கள் உடன் இருந்தனர்.
நாடுகானி பொன்னூர் அரசு உயர் நிலை பள்ளி வயதியில் பின் தங்கிய நிலையில் உள்ளது .இங்கு படிப்புகள் தரமாக வழங்கப்பட்டாலும் போதிய வசதி இல்லை இங்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ளது. பதினொன்று பபனிரெண்டாம் வகுப்புகள் அமைத்து தந்தால் எங்க ஊர் பிள்ளைகள் மற்ற பள்ளிகளுக்கு போக தேவையில்லை.
இவர்கள் அனைவரும் வெகு தொலைவு சென்று கல்வி கற்க வேண்டிய சூழல் உறுவாகி உள்ளது சிலர் தனியார் பள்ளிக்கு போகவேண்டிய நிலை உள்ளது எங்கள் பகுதியிலேயே உயர் கல்வி கிடைத்தால் இன்னும் இந்த பள்ளி உயர்வதோடு அதிக மதிபென்னில் முதல் இடம் பிடிக்கும் என பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment