சேரங்கோடு பஜார் செக்போஸ்ட் டேன்டி பகுதியில் மனித வனவிலங்கு மோதல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் கோட்ட வன அலுவலர் ஓம்கார் உத்தரவுபடி .பிதிர்காடு.சேரங்கோடு தேவாலா சுற்றுவட்டார பகுதியில் நடத்துபட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக சேரம்பாடி வனத்துறை சார்பில் மனித-வனவிலங்குகள் மோதல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு தெருமுனை பிரசாரம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சேரம்பாடி வனச்சரகர் ஐய்யனார் தலைமை வகித்தார். சேரம்பாடி வனவர் ஆனந்து . வனகாப்பாளர்கள் ஞான மூர்த்தி குனசீலன் .வேட்டை தடுப்பு காவலர்கள் உடன் இருந்தனர்.
இதில் மனித-விலங்கு மோதலை தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். இரவுநேரங்களில் காட்டுயானைகள் ஊருக்குள் நுழைந்தால் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காற்று மாசுபடுவதை தடுக்கவும் நீர் மாசுபடுவதை தடுக்கவும் வனத்தை காப்பாற்றவும் அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை நாடகம் மற்றும் கலைகுழுவினர்கள் தெருமுனை நாடகம் நடத்தி இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வனவர்கள் .தீ தடுப்பு காவலர்கள் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர் பலர் கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment