நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அருகாமையில் உள்ள அவலஞ்சி பகுதிக்கு தமிழக ஆளுநர் வருகை தந்தார்...
வருகை தந்த ஆளுநர் அவர்களை நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரிய இன மக்களான தோடர் இன மக்கள் அவர்களின் பாரம்பரிய உடை அணிந்து அவரை வரவேற்று அவர்களின் பாரம்பரிய உடையை தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களுக்கு அணிவித்து அவருடன் குழுவாக சேர்ந்து புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
இதைப்பற்றி தோடர் இன மக்களின் சுழல் சுற்றுலா மேலாண்மை குழுவின் தலைவர் திரு சாந்த்ராஜ் அவர்கள் கூறும்போது இன்றைய தினத்தில் ஆளுநர் அவர்களை வரவேற்றது எங்களுக்கும் எங்களுடைய தோடர் இனத்திற்கும் சுழல் சுற்றுலா குழுவினருக்கும் சிறப்பு...
இந்த நிகழ்வின் போது எங்களுடன் இருந்து காலையில் ஆளுநர் அவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற வனத்துறையினருக்கும் காவல் துறையினர் மற்றும் உடனிருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றியினைத தெரிவித்து கொண்டார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் KSTமகேந்திரன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு



No comments:
Post a Comment