பந்தலூர் அம்பேத்கார் நகர் காலனி பகுதியில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் நெல்லியாளம் நகராட்சி, ஆல் த சில்ரன் ஆகியன சார்பில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பொதுமக்களின் வீடுகளில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியதோடு கதவுகளில் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது மழைக்காலம் என்பதனால் சுத்தமான தண்ணீர் வீடுகளில் தேவை இல்லை என போடப்பட்டுள்ள சிரட்டைகள், கேன்கள் டயர்கள், உடைந்த பாத்திரங்கள், ஆட்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் இந்த தண்ணீரில் லார்வா எனப்படும் குழுக்கள் உருவாகி அவை ஏடிஸ் கொசுக்கள் மாறி கடிக்கும்போது டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது எனவே வீடுகளில் சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் சுத்தப்படுத்தி வைக்க வேண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் இருப்பதாக அறிந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார் நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பிரகாஷ் ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், சுகாதார பணியாளர்கள் சிந்து கார்த்திக் அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகி இந்திரஜித் ஆகியோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வீடுகளில் வழங்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment