உலக சுற்றுச்சூழல் தினம்
புற்றுநோயால் மாண்டவர்களால் கிடைத்தது விடை, ஓசோன் படலத்தில் ஓட்டை என்று.
உலகம் வெப்பமயம் ஆனது ஒவ்வொரு வீட்டிலும் எரிக்கின்ற விறகினால் அல்ல!
கால்நடை பயணத்தில், மரங்களின் சித்திரங்கள் மட்டுமே மனதிற்கு நிழலானது.
கரட்டு மைதானத்தில் ஆலமர விழுதுகளின் அழுகுரல், யாரோ இருவர் மரத்திற்கு பேரம் பேசியதால்.
விழுகின்ற விண்மீன் கற்களால் வானத்தில் நள்ளிரவில் குறைந்தது வெளிச்சம்.
அக்கினியின் திருமணநாள் முடிந்தும் கூட பூலோகத்தில் விழாக்கள்!
ரசாயன இடுபொருள்களால் புதிய கண்டுபிடிப்பு காய்கறிகளில் நிறமாற்றம்.
பூச்சிக்கொல்லிகளின் வரவால் மருத்துவர்களுக்கு சம்பள உயர்வு.
ஒரு மைல் தூரத்திற்கு ஒரு கருத்தரிப்பு மையம்
பிளாஸ்டிக் எனும் பொருளால் மண்ணிற்கும் மழைக்கும் விவாகரத்து!
மழையே இல்லை இன்று முயற்சிக்கிறது செயற்கை மழைக்காக உலகம்!
தொழில் என்று சொல்லி, சொல்லி இரவும் பகல் தான்! பகலும் இரவு தான்!
அன்று என் மாமா வீட்டிற்கு சென்றேன் மல்லிகையின் மணம் காற்றிலே!
மாமா வீட்டுக்கு சென்றேன் நேற்று
என் மூக்கை முட்டியது கூவத்தின் நாரிய மணம்!
மரங்கள் இயற்கையின் வளம் என்பார் ஏட்டில் மட்டும், காட்டில் இல்லை.
பசுமை புரட்சி என்பார் வளங்களை வறட்சி செய்வார்.
ஆக்கம் தரும் மரங்களை உண்டாக்கி தருவோம்!
ஏக்கமில்லா வாழ்விற்கு பாதை அமைப்போம்!
தூய்மை எனும் தாய்மையை போற்றி வளர்ப்போம் !
பாரத தாயை சிங்காரி ஆக்கி சிரித்து மகிழ்வோம்.
சுற்றுச்சூழலுக்கு வேலி அமைத்து,
நன்னீர்பாய்ச்சி, எருவிட்டு அடுத்த தலைமுறையின் மகிழ்ச்சியில் நாம் திளைப்போம்!. மகிழ்ச்சியில் நாம் திளைப்போம்!
இப்படிக்கு மலை மாவட்ட கவிஞர் ராஜ் கவுடா
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் KSTமகேந்திரன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment