77 ஆவது பிறந்தநாள் காணும் எஸ்பிபி அய்யா அவர்கள் இல்லாததை உணர்த்தும் கண்ணீர் வரிகள்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 June 2023

77 ஆவது பிறந்தநாள் காணும் எஸ்பிபி அய்யா அவர்கள் இல்லாததை உணர்த்தும் கண்ணீர் வரிகள்...

 




காற்றிலே கறைந்தாயோ எஸ் .பி. பி. ,இல்லை நீங்கள் மீண்டும்  பிறந்திருக்கிறீர்.


பாடு நிலாவே இனி நீ எழுந்து பாடாயோ ?25 செப்டம்பர் 2020இல் ஒரு சில மணித்துளிகள் உலகம் மௌனித்தது. உன் பிரிவை உயிர்கள் அறிந்ததாலோ!


ஐம்பது ஆண்டு நெடும்பயணம்  அலுத்ததோ உனக்கு? நீ மொனித்தது முதல் கிளிகளின் கீச்சு குரல் அழுகுரல் தான்.


 நீல மலையில் கடந்த வாரம் மரங்கள் எல்லாம் சாய்ந்தது உன் பிரிவை அறிந்து தானா?


 நுங்கம்பாக்கம் வீடு நீ வாழ்ந்த வீடு தாமரைபாக்கம் இனி நீ வாழும் வீடானதோ?



கண்ணாடி பெட்டிக்குள் கண்ணடைத்து உறங்கும் போது பலரும் சொல்லுகின்ற மனிதநேயம் 

உன் மறைவால் மீண்டு வருமா ?

 

அன்பின் அர்த்தம் ஆனவனே ;

கர்வம் அறியாதவனே; கண்ணியமானவனே!


 உன் முதல் படம் மனதில் உறுதி வேண்டும் .

நீ இல்லாத வெற்றிடத்தை நிரப்ப இனி யாரோ!


 உன்னை குளிப்பாட்ட இனி தண்ணீர் வேண்டாம் அன்புள்ளவர்களின் கண்ணீர் போதும். இது வைரமுத்துவின் வரிகள் .

நீ ஒரு பாடகர் ,இசை யமைப்பாளர் ,நடிகர் என்று சொல்வாரே இப்போது மரணம் என்று சொல் வெறும் நடிப்பா ?


இசை இனி முன்போல் இருக்காது. இது சின்னக்குயில் சித்ராவின் வரிகள்.


 அப்படியா எத்தனை நடிகர்கள் ,எத்தனை இசையமைப்பாளர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.

 நீ பல கலைஞர்களின் கருவறையானவன்!


உமது பாடலை பாடி நடிக்கும் எல்லா நடிகர்களும் உன் பிள்ளைகள்.


 இன்னிசையால் உணர்ச்சிகளுக்கு வடிவம்  தந்தவன்.


நீ வெற்றி ,அன்பு, மகிழ்ச்சி ,பக்தியின் குரலானவன்!


  வானம் தொட்டு போனார் மானமுள்ள தெய்வம் ,பட்டத்திற்கு வேறு சிற்றரசர் யாரு?இது ,நீ பாடியது


குயில் ஓசை கேட்ட பாரதியார் பாடியது, குயில் பாட்டு .

உன் ஓசை கேட்டிருந்தால் என்ன பாடல் பாடி இருப்பார்.


 மானுட வாழ்வின் அர்த்தங்களை உன் இசையின் வாயிலாக உணர்த்தி சென்றாயோ! இசைக்குயிலே, எங்கே சென்றாய்?


உன் பாதம் பூமித் தொட்டு வருடம் 77 காந்த குரலின் ஒலிப்பு ஒவ்வொரு நிமிடமும்,உனது பிறப்பு.


பிறந்தநாள்  வாழ்த்துக்கள்!



இப்படிக்கு மலை மாவட்ட கவிஞர் ராஜ் கவுடா 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் KSTமகேந்திரன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:

Post a Comment

Post Top Ad