மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 June 2023

மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு


உப்பட்டி பாரத மாதா மேல்நிலைப் பள்ளியில் மழைக்காலங்களில் மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார வாரியம் உப்பட்டி பிரிவு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆல் தி சில்ரன் மற்றும் ஏகம் பவுண்டேஷன் ஆகிய சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கீவர்கீஸ் தலைமை தாங்கினார். ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் வரவேற்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். 


தமிழ்நாடு மின்சார வாரிய கூடலூர் மின்கோட்ட செயற் பொறியாளர் சதீஷ்குமார் பேசும்போது மின்சாரம் என்பது கண்ணுக்கு தெரியாத உணரக்கூடிய ஒன்று. அளவாக முறையாக பயன்படுத்தி பயன்பெறலாம். மின்சாரம்  வாழ்க்கையின் இன்றி அமையாத ஒன்றாகிவிட்டது. மழை காலங்களில் மின்சார பாதிப்புகளை தடுக்க வேண்டிய அவசியம். மின்சாரத்தில் உள்ள நியுட்டல் ஷாக் அடிக்காது. பேஸ் தொட்டால் ஷாக் அடிக்கும். 

மின்சாரம் நம் உடலில் குறைந்த அளவு அதாவது 007 அம்பயர் அளவு தாக்கினால் உயிர் போய்விடும். மழை காலங்களில் காற்று வீசும்போது மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதனை தொடாமல், கம்பி விழுந்த இடத்திற்கு 

யாரும் போகாமல் பார்த்து கொள்ள வேண்டும். உடனடியாக மின் வாரியத்திற்கு பாதிக்கப்பட்ட இடத்தை சரியாக தகவல் சொல்ல வேண்டும். இதன்மூலம் விபத்தில் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க முடியும்.  மின்சாரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றார். 


கூடலூர் பந்தலூர் கோட்ட 

உதவி செயற்பொறியாளர் முத்துகுமார் பேசுகையில்: வீடுகளில் மின்சார இணைப்பு பெற்று இருக்கும் போது ஏர்த் போட்டு வைக்கவும்.  எர்த்துடைய ஓம்ஸ் 0 வாட்ஸ் ஆகும்

கையில் ஈரம் இருந்தால் 1000 ஓம்ஸ் அளவும்,

ஈரம் இல்லாத போது 8000 ஓம்ஸ் அளவும் இருக்கும். எர்த் அமைப்பு போட்டுவிட்டால் வீடுகள் கடைகளில மின்சார பாதிப்பு குறையும் 

அதுபோல் வீடுகளில் மின் இணைப்பு உள்ள போது ஆர் ஜி பி அமைப்பு வைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஆர் ஜி பி அமைப்பு 

இருந்தா தான் மின்சாரம் இணைப்பு வழங்கப்படும். அதுபோல மின்சார உற்பத்தி என்பது அதிக சிரமங்களையும், மூலப்பொருட்கள் கிடைக்காமலும் உள்ளது. எனவே இயற்கையாக கிடைக்கும் சோலார் இணைப்பை மக்கள் பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும் என்றார். 


உப்பட்டி உதவி மின் பொறியாளர் கார்த்திக் பேசும்போது தரமான மின் சாதனங்களை பயன்படுத்தினால் மின் சாதன பாதிப்புகளை தவிர்க்க முடியும். அதுபோல மின் வழித்தடங்களில் மின் கம்பிகளை உரசும் செடிகள், கொடிகள் இருப்பின் மின்வாரியதினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தேவையின்றி மின்சாரத்தை விரையமக்குவதை தவிர்த்து கொள்ள வேண்டும். குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்சார உபயோக பொருட்களை வாங்கி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். 


பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.  முடிவில் ஆல் த சில்றன் அமைப்பு.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் நன்றி கூறினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad