சைலேந்திரபாபு-வின் வாழ்க்கைப் பயணம்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 June 2023

சைலேந்திரபாபு-வின் வாழ்க்கைப் பயணம்...



கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்தவர் சைலேந்திர பாபு. மதுரையில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். 1987 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார்.   1989ல் பணி தொடங்கினார்...



கோபிச்செட்டிபாளையத்தில், காவல்துறை உதவி கண்காணிப்பாளராக (ADSP) 1989ல் காவல்துறை பணியை சைலேந்திர பாபு தொடங்கினார். அன்று முதல் இன்று வரை தனது பணிகளுக்கிடையே தொடர்ந்து மாணவர்களிடையேயும், இளைஞர்களிடமும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் கருத்துகளை பேசி வருகிறார்.எழுதி வருகிறார்...    


செங்கல்பட்டு, கடலூர் காஞ்சிபுரம் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்.பியாக பணியாற்றிய சைலேந்திர பாபு பின்னர், சென்னை அடையாறில் துணை ஆணையராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்ற அவர், சென்னையில் இணை ஆணையராகவும் பணியாற்றி உள்ளார்...


இவர் கோவை காவல் ஆணையராக 2010-11 ஆண்டுகளில் பணியாற்றினார். அப்போது கோவை கொடிசீயா மைதானத்தில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடைபெற செய்தார்...


கோவைக்கு பின்னர் வடக்கு மண்டல ஐஜி ஆகவும் பணியாற்றிய சைலேந்திர பாபு, லஞ்ச ஒழிப்புத் துறையில் தலைமை அதிகாரி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி என பல்வேறு பணிகளை வகித்தார். இதனிடையே பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டிஜிபியாக பணியாற்றினார். இவரது பதவி காலக்கட்டத்தில் தான் கடலோர காவல்படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியது, அந்த சம்பவத்தில் மீட்பு பணியில் சைலேந்திரபாபு கடலோர காவல் படையினருடன் இணைந்து பணியாற்றினார்.   தீயணைப்பு துறையின் ஏடிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பு வகித்த காலத்தில், அதாவது 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது தாம்பரம் முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று நீரில் மூழ்கிய பொதுமக்களை காப்பாற்றினார். பல பள்ளிகளில் பெண்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சிகள் தர நடவடிக்கை எடுத்தார்...   


காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக குடியரசுத்தலைவர் விருது, உயிர் காக்கும் பணிகளை மேற்கொண்டமைக்கான பிரதம மந்திரி விருது, தமிழக முதலமைச்சரின் கேலண்டரி விருது, தமிழக சிறப்பு டாஸ்க் ஃபோர்சின் கேலண்டரி காவல்துறை பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் சைலந்திர பாபுவுக்கு வழங்கப்பட்டுள்ளது...


இவருடைய வாழ்க்கைப் பயணம் பல இளைஞர்களுக்கு தூண்டு கோலாகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே   இவருடைய பதவிக்காலம் வருகின்ற 30ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:

Post a Comment

Post Top Ad