நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் தலைகவசத்தின் அவசியம் ஆகியவற்றை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி மாணவர்கள் மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
பேரணிக்கு கோத்தகிரி காவல் ஆய்வாளர் திரு. பதி அவர்கள் தலைமையேற்று நடத்தினார் கலந்துகொண்ட பள்ளி மாணவ மாணவிகள் தலை கவசம் உயிர் கவசம், தலைக்கவசம் அணிவோம் காத்திருக்கும் நம் குடும்பத்தை காப்போம், இரு சக்கர வாகனங்களில் தலைகவசமணிந்து மித வேகத்தில் பயணிப்போம் போன்ற மக்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோஷங்கள் எழுப்பிய படி மிகவும் உற்சாகமாக சென்றனர் கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர் திரு. பதி அவர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் முழுமையாக கலந்து கொண்டார் தலை கவசம் உயிர் கவசம் என்ற பள்ளி மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை கோத்தகிரி போக்குவரத்து காவலர் திரு. ராஜேந்திரன் அவர்களும் ரைட்டர் திரு. மகேந்திரன் அவர்களும் சிறப்பாக செய்திருந்தனர் அனைத்து போக்குவரத்து காவலர்களும் ஊர்வலம் நடைபெற போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment