நீலகிரி பகுதியில் பிளாஸ்டிக் பயன் படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது இன்னிலையில் பல்வேறு பகுதியில் மாவட்ட நிர்வாக இதற்கான பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது .
இன்னிலையில் மாநில எல்லை பகுதியான எருமாடு பகுதியில் திடீரென வருவாய் துறையினர் சோதனை மேற்க்கொண்டனர். கூலால் பகுதியில் வருவாய் துறையினர் சோதனை செய்த போது நாசர் என்பவரது கடையில் இரண்டு கிலோ பிளாஸ்டிக்பை மற்றும் டம்ளர்கள் பறி முதல் செய்யப்பட்டது .பின்பு பிளாஸ்டிக் பயன் படுத்தியதால் நாசர் என்பவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது .இதனை தொடர்ந்து நாசர் என்பவருக்கு அறிவுரை வழங்கினர். இந்த சோதனையின் போது வருவாய் அலுவளர் விஜயன். கிராம் நிர்வாக அலுவளர் யுவராஜ். எருமாடு காவல்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உடன் இருந்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment