முள்ளன் வயல் அருகே ஐனிபுரா பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவர் சோலை, பாடந்துறை உள்ளிட்ட பகுதிகளில் காட்டி யானைகளின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாக பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன் கொல்லி அருகே சாமியார் மலை, கோட்டப்பாடி பகுதிகளில் நடமாட்டம் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் இன்று தற்போது சற்று முன் அம்பல மூலா அருகே முள்ளன் வயல் ஐனிபுரா கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான பாஸ்கரன் என்பவர் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது ஐனிப்புரா என்ற பகுதியில் வைத்து கேரளா எல்லையில் இருந்து தமிழ்நாடு எல்லைக்கு ஆற்றை கடந்து வந்த காட்டு யானை இவரை தாக்கியுள்ளது. பின்னர் அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு ஆபத்தான நிலையில் பந்தலூர் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் தற்போது பரிதாபமாக பாஸ்கரன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் மிகுந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment