கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை செம்பக்கொல்லி பகுதியில் யானை அச்சுறுத்தல் இருப்பதால் மாணவர்களின் பாது காப்பை கருதி வனத்துறை வாகனத்தில் ஏற்றி பள்ளிகளில் கொண்டு போய் சேர்க்கும் பனியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவுபடியும், உதவி வனப்பாதுகாவலர் அவர்களின் ஆலோசனையின் படி கூடலூர் வனக்கோட்டம், கூடலூர் வனச்சரக்கத்திற்குட்பட்ட செம்பக்கொல்லி கிராம பழங்குடி மக்களின் பாதுகாப்புக்காகவும், இங்கு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதியும், பள்ளி மாணவ, மாணவர்களை வனத்துறை வாகனத்தின் மூலம் செம்பக்கொல்லியிலிருந்து ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு காலை அழைத்துசெல்லவும் மீண்டும் பள்ளி முடித்து திரும்ப அழைத்து வர தீர்மானிக்கப்பட்டு, இன்று முதல் நடைமுறைபடுத்தப்பட்டது .இந்த செயலால் செம்பக்கொல்லி மக்கள் நிம்மதியடைந்ததோடு வனத்துறையினரை வெகுவாக பாராற்றினர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment