என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 June 2023

என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு பேரணி


 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கூட்டம் நடைபெற்றது,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நெல்லியாலம் நகராட்சி சார்பாக நாடுகாணி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கூட்டம் நடைபெற்றது,


இதில் கூடலூர் கோட்டாட்சியர் முகமது துகரத்துல்லா  மற்றும் வட்டாட்சியர் சித்தராஜ் தலைமை வகித்தனர் நெல்லியாலயம்  நகர மன்ற தலைவி சிவகாமி மற்றும் நெல்லியாலயா நகர செயலாளர் சேகர் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,


இந்நிகழ்ச்சியில் சாலை ஓரம் மற்றும் ஊர் பகுதிகளில் கிடக்கும் குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்தினர் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தனித்தனியே குப்பைகளை பெற வரும் நகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது இதில் மக்கும் குப்பைகள் உரமாக பயன்படுகிறத என்றும் மக்காத குப்பைகள் மறுசுழற்சி முறையில் பயன்படும் என்றும் அதனால் பொதுமக்கள் தெருக்களில் குப்பைகளை வீசுவது தவறு என்றும் குப்பைகள் பெற வரும் நகராட்சி ஊழியர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது இதில் நாடு காணி நிலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:

Post a Comment

Post Top Ad