வடிவேலு மீம்ஸ் வைத்து விழிப்புணர்வு... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 June 2023

வடிவேலு மீம்ஸ் வைத்து விழிப்புணர்வு...

 



வடிவேலு மீம்ஸ் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நீலகிரி மாவட்ட காவல்துறையினர்.



          நீலகிரி மாவட்ட காவல்துறையினர் புதிய முயற்சியாக வடிவேலு மீம்ஸ் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர். அதில் " உங்களுக்கு 50000  cash prize  வந்துருக்குனு ஒரு msg  வந்துச்சு இந்த பணம் வேணும்னா ஒரு link அ கிளிக் பண்ணனும்னு சொன்னாங்க, நானும்  லிங்க் தானேனு நம்பி கிளிக் பண்ணுனேன் account ல இருந்த மொத்த பணமும் போயிருச்சு..". என்று  கிரி பட வடிவேலுவை வைத்து மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் போனுக்கு வரும் fake மெசேஜ்களின் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சைபர் குற்றம் தொடர்பான உதவி எண் 1930 அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



இந்த மீம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு போன்ற பல விழிப்புணர்வுகள் நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பாக வழங்கப்படுவது நீலகிரி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad