மரம் முறிந்து விழுந்து விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப் தரபிய மூதாட்டி... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 May 2023

மரம் முறிந்து விழுந்து விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப் தரபிய மூதாட்டி...

 


நீலகிரி மாவட்டம். பந்தலூர்  கொளப்பள்ளி  அடுத்துள்ள குறிஞ்சிநகர் ஏழு கோவில் பகுதியில் மரம் முறிந்து விழுந்து விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப் தரபிய மூதாட்டி...

  தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில்  தற்போது  பல்வேறு பகுதிகளில் தற்போது கோடை மழை துவங்கி அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.


 இதில் குறிப்பாக நீலகிரி மாவட்டம் உதகை,கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் ஆங்காங்கே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் இன்றைய தினம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.


 இந்நிலையில் கொளப்பள்ளி அருகே குறிஞ்சி நகர் ஏழுகோவில் பகுதியில் 72, வயதான செவந்தாயி என்பவர் வசித்து வரும் நிலையில் இன்று குளிப்பதற்காக குளியறைக்கு சென்றுவிட்டு பிறகு மீண்டும் துணிகள் எடுக்க வெளியே வந்த போது திடீரென அருகே இருந்த மரம் முறிந்து வீட்டின் பக்கவாட்டின் சுவரில் குளியறை மீது விழுந்து சேதமானது  அந்த சமயத்தில் மூதாட்டிந வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து மூதாட்டியின் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டு கூடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


 இதுகுறித்து மூதாட்டி கூறுகையில், இந்த மரம் ஏழுகோவில் பகுதியில் உள்ள கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான மரம் என்றும் மழை காலத்தில் இந்த மரம் விழ வாய்ப்புள்ளதால் இந்த மரத்தை வெட்ட கோரி பலமுறை அவர்களிடம் தெரிவித்த போதிலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என கூறி மரத்தை வெட்டாமல் நாட்களை கடந்தி வந்ததாகவும் இந்த நிலையில் இன்று இந்த விபத்து நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.


இந்த விபத்தை பார்த்தாவதுந கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில்  ஆபத்து நிறைந்த இது போன்ற மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என கிராம் மக்கள் கூறினர் கூறினார் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:

Post a Comment

Post Top Ad