சி.ஐ.டியு மாதர் சங்கம் மற்றும் மூப்பன்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவ முகா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 May 2023

சி.ஐ.டியு மாதர் சங்கம் மற்றும் மூப்பன்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவ முகா


 பந்தலூரை அடுத்துள்ள  எருமாடு நீலகிரி மேல்நிலை பள்ளியில் வைத்து சி.ஐ.டியு மாதர் சங்கம் மற்றும் மூப்பன்ஸ்  மருத்துவ கல்லூரி  மருத்துவ முகாம் நடைபெற்றது...

  


 நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் உள்ள நீலகிரி மேல்நிலை பள்ளியில் வைத்து CITU ..மாதர் சங்கம் மற்றும்     Dr.மூப்பன்ஸ் மருத்துவ கல்லூரி மேப்பாடி மற்றும் ஆகியன இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை CPIM மாவட்ட செயலாளர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். மேலும் விவசாய சங்க மாவட்ட செயலாளர் யோகண்ணன் வாழ்த்துரை வழங்கினார். , CPIM ஏரியா செயலாளர் ராஜன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் அனீபா மாஸ்டர், மேபீல்ட் மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேப்பாடி விம்ஸ் மருத்துவ மனையின் பொது மேலாளர் திரு.சூஃபி கல்லங்கோடன் சிறப்புரையாற்றினார்.  எருமாடு முகலைய மெடிக்கல் உரிமையாளர் டாக்டர். முஜீப் மருத்துவ குழுவினர்  கலந்துக்கொண்டனர்...


இந்த முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை,கண் மருத்துவம், காது தொண்டை, மூக்கு மற்றும் பெண்கள் மருத்துவம் ஆகிய மருத்துவ பிரிவுகள் செயல்பட்டனர்.


 மேலும் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இதய சம்பந்தமான நோய்கள் அதிகரித்து வரும் நிலையில் CITU மாதர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இதய சிகிச்சை நிபுணர் Dr.சந்தோஷ் நாராயணன் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தார். 


தொடர்ந்து இதுகுறித்து மூப்பன்ஸ் மருத்துவ கல்லூரி பொது மேலாளர் சூஃபி கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்ததாகவும், பலர் இங்கு சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாகவும், இங்கு வெளி மாநிலங்களில் சிறந்து விளங்கும் அனுபவம் வாய்ந்த  மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிப்பதாகவும்,தமிழகரசின் கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் பலர் இங்கு சிகிச்சை பெற்று பயனடைகின்றனர் ..


அதிலும் பந்தலூர் கூடலூர் தாலுகா பகுதி மக்கள்  அதிகளவு வருகை தரும் நிலையில் காப்பீடு மூலமாகவும் குறைந்த செலவில்தான் முறையான சிகிச்சை அளிக்கபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழக அரசு நல்ல பல திட்டங்களை வகுத்து தமிழ் நாடு மக்களுக்கு மருத்துவத்திட்டங்களை செயல் படுத்தி வருவதாக கூறினார்..

 சூஃபி மழையாளியாக இருந்தாலும்   தளபதியார் மக்களுக்கு நல்ல பல திட்டங்களை  செய்து வருவதை பெருமையுடன் கூறினார் ..


இது போல் எருமாடு கமினியூஸ்ட்  சி பி ஐ எம். மாவட்ட செயலாளர். வி.ஏ.பாஸ்கரன் அவர்கள் கூறுகையில் உயர் தர சிகிச்சை பெர அன்டை மாநிலமான கேரளா வயநாடு பத்தேரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது இங்கு அதிக செலவு ஏற்படுவதால் நடுத்தர நிலை மக்களும் மிக பிற்படுத்தப்பட்ட அன்றாட ஏழை கூலி தொழிலாளி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர என கூறினார்.


இன்னிலையில் மக்கள்  மீது நலம் கொண்டு மாவட்ட நிர்வாகம்  முதலமைச்சரிடம் எடுத்து கூறி விம்ஸ் மருத்துவ மனையில்  மருத்துவ காப்பீட்டால்  உயர் தர சிகிச்சை கிடைக்க ஆவனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.. 

முகாமில் ஐநூறுக்கும் மேற்பட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்த மக்கள் கலந்துக்கொண்டு  பயன் பெற்றனர்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad