தமிழக குரல்
தமிழக குரல் என்பது தமிழக மக்கள் குரல்
அது சிம்மக்குரல், சிங்கார குரல்
ம்ம்
பசிக்கு சோறுபோடும் அன்னக்குரல்
பழிக்கு அஞ்சா ஆண்மைக்குரல் !
துயரம் கண்டால் துடிக்கும் குரல்
தூங்கும் மனிதரை எழுப்பும் குரல்
வரதட்சணை ஒழிப்புக்குரல்
வரன் தேடும் வரதன் குரல்
இதுதான் தமிழக குரல் !!!
உள்ளதை உரைக்கும் உண்மைக்குரல்
உள்ளத்தை அறிந்தவரின் ஆண்மைக்குரல்
தரணி போற்றும் தமிழக குரல்
இதுதான் தமிழக குரல், தகடூர் குரல்!
இருவிழி இழந்தோர்க்கு இது தீபக் குரல்
இடித்துரைத்து தெப்பம் செய்யும் தமிழக குரல்
கடிந்துரைத்து காக்கும் குரல்
காதல் தீயை வளர்க்கும் குரல் !
சந்தடி சகுனிக்கு சவுக்கடி தரும் குரல்
சாந்தமே வாழ்வென வாழும் இனிய குரல்!
ஞாயிராய் கதிர்வீசி ஒளிதரும் குரல்
ஞாயிற்றவன் பெயர் ஓங்க ஒலிக்கும்!! ஒலிக்கும் குரல்
தமிழகமே வியக்கும் தமிழக குரல்
தாயுள்ளம் படைத்த வியப்பு குரல்!
நகரமே நடுங்க ஒலிக்கும் குரல்
நாகரிகம் தொனிக்க படுத்தும் குரல்
பண்பாடு சிறக்க பாடுப்படும் குரல்
பாரேப்போற்றும் தமிழகக் குரல்!!!
மண்ணின் மைந்தன் தமிழக குரல்
மாந்தரின் மனதை அறிந்த குரல்
யதார்த்தமாய் ஒலிக்கும் குரல்
யாவரும் தன்னுள் போற்றும் குரல்
ரகரத்தின் வரிசையை அறிந்த குரல்
ராசாவாய் வந்த ராசி குரல்
இலட்சணமாய் என்றும் வரும் குரல்
இலாபமிலா சேவை எனும் இலட்சிய குரல்
வருபவர் யாரென்று அறிவிக்கும் குரல்
வந்தவர் இவரைப் போற்றும் குரல் !!!
ழகரத்தின் பொன்னெழுத்தை உதிர்த்த குரல்
ளகரத்தின் மேன்மையை உச்சரித்த குரல்
றகரத்தைப் போற்றும் குரல்
நகரத்தை வேர்படுத்தி தந்த குரல்
எமது தமிழகக்குரல் !!!
வாழ்க வளமுடன்
செ. இராசன் ,
தமிழ் பேராசிரியர்,
நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளூர்.நீலகிரி மாவட்டம்.


No comments:
Post a Comment