கோழிப்பாலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 17 ஆம் ஆண்டு தேர் திருவிழா... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 May 2023

கோழிப்பாலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 17 ஆம் ஆண்டு தேர் திருவிழா...

 


கோழிப்பாலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 17 ஆம் ஆண்டு தேர் திருவிழா...



நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கோழிப்பாலத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்  கடந்த மூன்றாம் தேதி திருத்தேர் திருவிழா துவங்கியது. அதன்படி கடந்த மே.03ம் தேதி காலை 04.30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜையுடன் காலை 09.00 மணிக்கு கொடியேற்றம் விழா துவங்கியது. திரு.ராமன் பாபு அவர்கள் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து மாலை 6 மணியளவில் பால் அபிஷேகமும், 7 மணிக்கு பிள்ளையார் பாலம் ஆற்றங்கரையில் இருந்து அம்மன் குடியழைப்பு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து நேற்றைய தினம் பறவை காவடி, புஷ்பக்காவடி, வேல் பூட்டுதல் மற்றும் பூக்குண்டம் இறங்குதல் நிகழ்வும் பின் சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று மாலை 06 மணிக்கு மேளதாளத்துடன் அம்மன் திருத்தேர் பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு இரும்பு பாலம் பிள்ளையார் ஆலயம் சென்று பூஜைகள் பெற்று அங்கிருந்து பள்ளிப்படி டாக்டர் காலணி முத்துமாரியம்மன் ஆலயம் சென்று பூஜைகள் பெற்று மீண்டும் ஆலயம் சென்றடைய உள்ளது...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad