- சின்ன கொளப்பள்ளி - சேரங்கோடு பகுதியில் சாலை அமைக்கும் பணி தீவிரம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சின்ன கொளப்பள்ளி முதல் சேரங்கோடு பகுதிக்கு சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் தற்போது 3 கிமீ தூரம் 4.98 இலட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை குறுகிய சாலையாக இருந்து வந்த காரணத்தால் அப்பகுதி பொதுமக்கள் வாகனத்தில் செல்லும் போது 5 கிமீ சுத்தி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த சாலை அகலமாகவும் தரமானதாகவும் அமைக்கபட்டு வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....


No comments:
Post a Comment