சேரங்கோடு அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 14 May 2023

சேரங்கோடு அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா

 


சேரங்கோடு அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது

  நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் அன்னை வேளாங்கண்ணி ஆலய கோவில் உள்ளது. இந்த கோவில் தற்போது அமைந்துள்ள‌ இப்பகுதியில் ஆரம்பத்தில் ஒரு சிறிய குளம் இருந்ததாகவும் இந்த குளத்தில்  இயேசு பிறந்த சமயத்தில் அன்னை வேளாங்கண்ணி வந்து நீர் அருந்தி சென்றதாகவும் ஐதீகம் உள்ளது. எனவே இதனை கண்ட சிலர் அப்பகுதியில் அன்னை வேளாங்கண்ணிக்கு ஆலயம் அமைத்து தரிசித்து வருகின்றனர். பழமை வாய்ந்த இந்த ஆலயத்திற்கு தமிழக, கேரள மற்றும் கர்நாடகா எல்லை பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்வது வழக்கம். அதன்படி இன்றைய தினம் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமானவர்கள் வருகை தந்திருந்தனர். மேலும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக அன்னை மாதாவின் தேர்பவனியும் நடைபெற்றது. கடந்த வருடம் வரை கைகளால் அன்னை வேளாங்கண்ணி தேர் தூக்கி செல்லபட்ட நிலையில் நடப்பு ஆண்டு வண்ண மின்னொளிகளால் அலங்கரிக்கபட்ட வாகனத்தில் தேர்பவனி நடைபெற்றது. மேலும் ஆலயமும் மின்னொளியில் ஜொலிக்கிறது. தொடர்ந்து இங்கு வார பூஜைகளும் சிறப்பாக எடுத்து நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு... ‌

No comments:

Post a Comment

Post Top Ad