கூடலூர்
என்று தீரும் எங்கள் தாகம்
மலையாளத்தின் அடையாளத்தை திலகமாக்கி,
கன்னடத்தின் வடிவத்தை காற் சிலம்பாக்கி
நர்த்தகியில் நடனம் புரிந்த தமிழ்பெண்ணே!
தமிழ் மாநிலத்தின் வடவெல்லை மைசூரு
மேற்கெல்லை--கோழிக்கோடு--என்று
கூடுமிடம் கூடலூராகி, கூடி நிற்கும் கூட்டத்திற்கு வணக்கம்.
அக்னி வெயிலில் குளுமைத் தந்த
மாரிக்கு வணக்கம்!
உதகையின் குளிருமில்லை,கோழிக்கோட்டின் வெம்மையுமில்லை.உயர்வுகொண்ட காலநிலை.
உள்ளோர்க்கு உயர்வு தரும்!
மலை அரசியின் மேனியில் பச்சைப் போர்வை
விளைப்பொருளாம் அணிகலன்கள்
பேசி,பேசி அலுத்து போன பாமரன். இடையில்
பேசாமல் உலாவரும் ஜீவன்கள்!
எமனின் கணக்கேட்டில் கூடலூருக்கு தங்ககோப்பை!
விடிவெள்ளியை கண்டதே இல்லை! காரணம்
என் விடியல் நேரம் காலை ஏழு மணி
கேட்டதுண்டு
நிலவும் பெண் அழகானவளென்று
எங்கள் முன் கதவுக்கு
என் அப்பாவே காவலாளி!
இங்கே பேச்சொன்றை துடுப்பாக்கி,
வாழ்க்கை எனும் பாவப்படகை செலுத்தும் படகோட்டிகள்
நான் அன்று படித்த பாடம் section 17 என்று
இன்றும் syllabus ல் மாற்றமில்லை
போராட்ட கனலில் சிக்கி சில மேனிகள். ---வாழ்க்கை போராட்டத்தில் சிக்கி சில மனசுகள்
பாரதியின் எண்ணம்
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று.
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று
பேசியது)கைப்பிடி சாம்பலை
ஆற்றில் கரைத்தபோது
ஏழு மணிக்கு உறங்கியதும் மணியோசை கேட்போம்--அது கோயில் யானையினது அல்ல
காட்டு யானையின் வரவை அறிவிக்கும்
வனத்துறையின் சயரன் அது!
நான் வழக்காடு மன்றம் சென்றேன்
பக்கத்தில் என்
புளியம்பாறை வீட்டிற்கு புலிகளின் வாடகை பாக்கி என்று
என் கண்களில் நீர் பெருக்கெடுக்கும்.
வேனிற் காலத்தில் பாண்டியாற்றை ஈடுசெய்ய
கூடலூர் ஓர் அழகு சோலை. ஆம்
அழகான சோலை. அழகான பள்ளிக்கூடம். ஆம்
வாய்பேசா மிருகங்களுக்கு!
நேற்றைய கனவில் மௌண்ட்பேட்டனின்
சிம்மகுரல்
சுதந்திரம் எனும் பேச்சுக்கு அகராதியில் விளக்கமில்லை என்று!
வைகாசியில் முன்கால் வைப்பாள்
பருவமழை மணப்பெண்
ஆடியில் அடைமழை என்று சொல்லி அழவைத்து ,சிரித்து மகிழ்வாள்!
பின் பிரிந்து செல்வாள்.
அடுத்த வைகாசிக்கு வருவேன் என்று சொல்லி
எமது வாழ்வில் குறையுமில்லை! நிறையுமில்லை
தீர்த்து வைக்க ஒருவருமில்லை.
இம்மண்ணுக்கும்,விண்ணுக்கும்,நிலவுக்கும்
சவாலாய் நின்ற கூடலூரின் வாழ்க்கை
இப்போது சூரியனுக்கும் சவாலானதோ!
என்று தீரும் எங்கள் தாகம்!!!
வாழ்க வளமுடன்
செ. இராசன் ,
தமிழ் பேராசிரியர்,
நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளூர்.நீலகிரி மாவட்டம்.


No comments:
Post a Comment