கூடலூரை அடுத்த அரசு உயர் நிலைப் பள்ளி பொன்னூர் மாணவி சாதனை பொது மக்கள் வாழ்த்து..
2022-23 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற NMMS தேர்வில் தமிழ்நாட்டில் 6695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் நீலகிரி மாவட்டத்திலிருந்து 14 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கூடலூர் கல்வி மாவட்டத்திலிருந்து தேர்ச்சி பெற்ற 4 மாணவர்களில் ஒருவராக அரசு உயர்நிலைப் பள்ளி பொன்னூரில் பயிலும் மாணவி செல்வி தாரணி த/பெ ரங்கராஜன் தேர்வாகியுள்ளார். அவருக்கு ஆசிரியர்களும் பெற்றோரும் வாழ்த்து தெரிவித்தனர். மாணவி தாரணி ஊக்கமும் பயிற்சியுமளித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் நன்றிகளைத் தெரிவித்து கொண்டார்.


No comments:
Post a Comment