நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெற்றுவரும் கோடை திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக இன்று கோத்தகிரி நேரு பூங்காவில்12 வது காய்கறி கண்காட்சியினை தமிழ்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் க. ராமச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மாவட்ட ஆட்சி தலைவர் அம்ரித் இ.ஆ.ப. ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்...
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் கோடை திருவிழாவினை காண அண்டை மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சமவெளி பகுதியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கம் மற்றும் பள்ளி கல்லூரி விடுமுறையை ஆகிய காரணங்களால் குடும்பத்துடன் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்து வருவது வழக்கம்...
கோடைவிழாவின் முதல் நிகழ்வாக தோட்டக்கலை துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற்றது. . இங்கு பலவகையான காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட விலங்குகள், பறவைகள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டவைகளில் கத்தரிக்காயில் செய்த பொம்மைகள், கேரட் பீட்ரூட்டில் செய்த தேர், ஒட்டகச்சிவிங்கி, குடைமிளகாயில் செய்த சோளம், கிழங்கில் செய்த கம்பு, சேனைக்கிழங்கில் செய்யப்பட்ட பவானிசாகர் அணை, பூசணிக்காயில் செய்த ட்ராகன், கத்தரிக்காயால் ஆன யானை, பாகற்காயினால் செய்யப்பட்ட முதலை போன்றவைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது...
ஐ லவ் கோத்தகிரி போன்ற வாசகங்கள் உள்ளூர் வாசிகளையும் கவர்ந்தது. மொத்தமாக 4 டன் காய்கறிகளால் இந்த காய்கறி கண்காட்சி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதுநீலகிரி மாவட்டம் உருவானதை பற்றிய சுவாரிஸ்யமான பல தகவல்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். நாட்டியபள்ளியின் சார்பாக பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முனைவர் பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு மாவட்ட காவல்பணி சிறப்பாக நடைபெருவது பற்றி கூறினார். கோத்தகிரி காவல் ஆய்வாளர் திரு. வேல்முருகன் அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பதி அவர்களுடன் போக்குவரத்து காவலர்கள் ஊர்க்காவல் படையுடன் இணைந்து போக்குவரத்து பணியை சிறப்பாக கையாண்டனர்...
கோத்தகிரி தாசில்தார் திருமதி. காயத்ரி அவர்களின் உத்தரவின் பேரில் வருவாய்துறையினரும், கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் திரு. மணிகண்டன் அவர்களின் உத்தரவின்படி பேரூராட்சி பணியாளர்களும், கோத்தகிரி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திருமதி. ஐஸ்வர்யா அவர்களின் உத்தரவின் பேரில் தோட்டக்கலைத்துறை பணியாளர்களும் சிறப்பாக சேவையாற்றினர். பேரூராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டது, கோத்தகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருந்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் த. ராஜேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் மருத்துவ முகாம் அரங்கு அமைத்து சேவையாற்றினர்...
அரசு மற்றும் தனியார் அரங்குகள் தன்னார்வலர்கள் அமைப்பு அரங்குகள் மலை மாவட்ட விவசாயிகள் சங்க அரங்கு ஆதிவாசிகள் அமைப்பு அரங்கு பேரூராட்சி இயற்கை உர அரங்கு உட்பட அணைத்து அரங்குகளையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நாளை மே 7 அன்று மாலை நிறைவு விழாவில் சிறந்த அரங்குகளுக்கு பரிசளிப்பு வழங்கப்படும். பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் மாவட்ட ஊராட்சி தலைவர் உட்பட திமுக கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றுலா பயணிகள் இதமான கால நிலை மற்றும் காய்கறி கண்காட்சியை மிகவும் ரசித்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...










No comments:
Post a Comment