நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கிய நிலையில் கூடலூர் பந்தலூர் பகுதியில் சூரிய வெளிச்சம் சுட்டெரிக்கிறது இதனால் பல்வேறு பகுதியில் பூமி வரன்ட நிலையில்உள்ளது .
இன்னிலையில் தண்ணீர் இன்ற காடுகள் மற்றும் தேயிலைச்செடிகள் வெயில் தாக்கத்தால் காய்ந்து விடுகிறது இதனால் பூமியின் நிலத்தடி நீர் குறைந்து காணப்படுகிறது .. இன்னிலையில் கோடை காலம் என்பதால் கிணறுகளிலும் நீர் இன்றி போய் விடுகிறது இது போன்ற சம்பவம் பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பகுதியில் கிணற்றின் நீர் வற்ற துவங்கியதால் அந்த கிராம பகுதிக்கு ஒரு வாரமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது .
சேரங்கோடு பஜாரில் நற்போது வரச்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் சம்மந்தமாக ஊர் கவுன்சிலர் முத்துசாமி அவர்களிடம் தண்ணீர் தட்டுப்பாடு என்று கூறினர் .
இந்த சம்பவத்தை அறிந்த முன்னால் கவுன்சிலர் ராஜா .கணபதி போன்றோர் சேரங்கோடு பஞ்சாயத்தில் மக்களின் நிலையை சொல்லி சேரங்கோடு காலனி மக்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்து தறுமாறு பஞ்சாயத்து தலைவியிடம் கேட்டனர்..
இதனிடையே சேரங்கோடு பகுதியில் சாலை ஓரமாக ஏழ வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலமாக சேரங்கோடு மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது .
இந்த பணியிலை பஞ்சாயத்து புலம்பர் குமார் அவர்கள் உடனடியாக வந்து ஊர் பொது மக்கள் ஒத்துழைப்போடு சீர் செய்து குடிநீர் ஏற்பாடு செய்து கொடுத்தார் மின் இனைப்பை ஏற்படுத்தி தண்ணீர் வரசெய்த பின் தண்ணீரை கவுன்சிலர் முத்து சாமி குடித்து பார்த்தார் தண்ணீர் சுவையாக இருப்பதாக பொது மக்களிடம் கூறினார் .பின்பு கிராம மக்கள் தண்ணீரை பிடித்தனர் இதனால் அப்பகுதியில் உள்ள அறுபது குடும்பங்கள் பயன் பெற்றனர் .
குறுகிய நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்து தந்த கவுன்சிலர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவி மற்றும் அலுவலக ஊழியார்க்கும் ஊர் பொது மக்கள் தெறிவித்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment