சேரங்கோடு பஜாரில் வைத்து மே தின முதல் நாள் இன்று கிராம சபை கூட்டம் நடை பெற்றது இதில் கிராம மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் குறைகளை எடுத்துரைந்தனர்.
தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின் படி மே தினத்தன்று ஒவ்வோறு கிராம புறங்களில் கிராம சபை கூட்டம் நடை பெற வேண்டும் என உத்தரவு அளித்ததின் படி இன்றைய தினம் மே முதல் நாளே சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது...
இந்த கூட்டத்தை சேரங்கோடு பஞ்சாயத்து தலைவி லில்லி ஏலீயாஸ் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது. கிராமசபை கூட்டத்திற்கு வந்தோர்களை பஞ்சாயத்து அலுவலக செயலாளர் சஜீத் வரவேற்றார். நிகழ்வில் பஞ்சாயத்து துனை தலைவர் சந்திர போஸ் கூடலூர் பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஸ் மற்றும்அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தின் துவக்கத்தில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சனை தெருவிளக்கு சாலை வசதி பாலம் அமைத்தல் போன்றவை பேசப்பட்டது . இதில் துறை சார்ந்த அலுவலர்கள் அதற்கு தீர்வு காண்பதாக கூறினர் .
கூட்டத்தில் சப்பத்தோடு பகுதியில் முல்லுகுறும்பர்கள் தங்கள் பகுதியில் எந்த அடிப்படை வசதி இல்லை என்பதை பலமுறை கிராம சபையில் கூறினோம் என்றனர் அதற்கு பஞ்சாயத்து தலைவி அவர்கள் உங்கள் பகுதிக்கு வெகு விரையில் அந்த பனி நடை பெறும் என கூறினார்.
இதன் இடையேமுன்னால் யூனியன் கவுன்சிலர் வடிவேல் எழந்து கூறுகையில் இந்த ஆட்சியை பற்றி குறை கூராதீர்கள் நிறைகளையும் கூறுங்கள் என்றார் பஞ்சாயத்து துனை தலைவரிடம் என் பகுதிக்கு சாலை வசதி இல்லை என்றேன் அந்த குறையை துனை தலைவர் நிவர்த்தி செய்தார் அது மட்டுமல்ல தற்போது என் பகுதிக்கு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர். ராசா அவர்களின் பொது நிதியிலிருந்து ஏழு லட்ச செலவில் சேரம்பாடி ரேஞ் 4.பகுதியில் கிரான்டீஸ் காட்டில் இருந்து அம்மன் கோவில் வரை தார்சாலை போடப்பட்டது.
அதே பகுதிக்கு பாலம் இல்லை என கூறியதற்கு இரண்டரை லட்ச செலவில் பாலம் அமைக்கும் பனி துவங்கப்பட்டது. அதே பகுதிக்கு கிராம புறத்திற்கு நான்கு லட்ச ரூபாய் செலவில் சிமென்ட் நடை பாதை போடப்பட்டது எனகூறினார் .
நமது பகுதிக்கு தேவையான உதவிகளை உடனே செய்து விட முடியாது ஒவ்வோன்றும் மெதுவாகத்தான் செய்வார்கள் என கூறினார்.
கூட்டத்தில் சேரங்கோடு பகுதிக்கு தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால் மக்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் கஸ்டப்படுகிறார்கள் என கவுன்சிலர் முத்துசாமியிடம் தெரிவிக்க அதை பஞ்சாயத்து தலைவரிடம் கூறிய மறுதினமே ஆழ்துளை கிணறு மூலம் குடி நீர் தற்போதைக்கு வழங்கப்பட்டது . மீத முள்ள பகுதிக்கு குடிநீர் வழங்க பஞ்சாயத்து தலைவி லில்லி ஏலீயாஸ் மற்றும் துனை தலைவர் சந்திரபோஸ் பஞ்சாயத்து செயலாளர் சஜித் போன்றவர்களை பொது மக்கள் அழைத்து சென்று நேரில் காண்பித்தனர். பார்வையிட்ட துனை தலைவர் வெகு விரைவில் இப்பகுதியில் உள்ள கிணறுகளை தூர்வாரி குடிநீர் கிடைக்க ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறினார்.
இன்னிலை அந்த ஊர் கவுன்சிலர் முத்துசாமியிடம் உடனே இந்த பனியை துவங்கி குடி நீர் பற்றாகுறையாக உள்ள இடங்களுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment