கூடலூரில் ஆர்ப்பாட்டம்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 May 2023

கூடலூரில் ஆர்ப்பாட்டம்...

 

கணித பாடப்பிரிவு நீக்கம் செய்யபட்டது தொடர்பாக கூடலூரில் ஆர்ப்பாட்டம்...



நீலகிரி மாவட்டம் கூடலூரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டு இளநிலை கணித பாடப்பிரிவு நீக்கம் செய்யபட்டுள்ளது. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதி கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் கணித பாடப்பிரிவு படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் பல கிலோ மீட்டர் தொலைவில் பயணம் செய்து உதகைக்கு அல்லது வேறு மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதை கருத்தில் கொண்டு நடப்பாண்டு நீக்கம் செய்யபட்ட இளநிலை  கணித பாடப்பிரிவை நடப்பாண்டே சேர்க்க வேண்டுமென கூடலூர்  நகர அஇஅதிமுக சார்பாக கூடலூர் எம்எல்ஏ திரு பொன் ஜெயசீலன் தலைமையில் கூடலூர் நகர கழக செயலாளர் திரு. H.செய்யத் அனுப்கான் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad