கூடலூரில் கொல்லையில் ஈடுபட்ட இருவரை ஒருவரை அதிரடியாக தற்காப்புக்காக சுட்டு பிடித்த காவல்துறையினர்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 May 2023

கூடலூரில் கொல்லையில் ஈடுபட்ட இருவரை ஒருவரை அதிரடியாக தற்காப்புக்காக சுட்டு பிடித்த காவல்துறையினர்...

 



கூடலூர் அருகே அதிகாலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்,



நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியில் இரவு நேரத்தில் கூடலூர் சிறப்பு காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் இருந்த போது குந்தலாடி டாஸ்மாக் கடையை உடைக்க முயற்சி செய்த இருவரை காவலர்கள் சியாபுதீன் மற்றும் அன்பழகன் அவர்களை மடக்கி பிடிக்கும் போது அரிவாளால் காவலர்களை தாக்க முயற்சி செய்து உள்ளார்கள் இதனைத் தொடர்ந்து தற்காப்புக்காக காவலர்கள் குற்றவாளிகளை துப்பாக்கி சூடு நடத்தி மடக்கிப் பிடித்தனர் இதில் மணி என்ற சாம்பார் மணி 47 சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது,



மேலும் காயம் அடைந்த காவலர்கள் சியாபுதீன் மற்றும் அன்பழகன் ஆகிய இருவரையும் காயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இது குறித்து நீலகிரி மாவட்ட எஸ்பி முனைவர் பிரபாகரன் தற்பொழுது சம்பவம் நடந்த கூடலூர் குந்தலாடி பகுதிக்கு விசாரணைக்காக சென்றுள்ளார்,


மேலும் சுட்டுபிடிக்கப்பட்ட மணி என்ற சாம்பார் மணி தேடப்படும் குற்றவாளி என்றும் மேலும் தப்பியோடியவன் யார் என்று கூடலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad