குன்னூர் சிம்ஸ் பூங்கா பழம் கண்காட்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 May 2023

குன்னூர் சிம்ஸ் பூங்கா பழம் கண்காட்சி


குன்னூர் சிம்ஸ் பூங்கா பழம் கண்காட்சி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்ட 68 வது பழம் கண்காட்சி ஆனது மக்களுக்கு மனதிற்கும் கண்களுக்கும் இதம் தரும் வகையில் பழங்களால் வடிவமைக்கப்பட்ட உருவ பொம்மைகள், எள் மற்றும் சீரகத்தினால் உருவாக்கப்பட்ட யானை உருவங்கள், கொத்து கொத்தாக பூத்துக் குலுங்கியா வண்ண மலர்கள், பிரம்மாண்டமான மரங்கள், அழகிய படகுகள் போன்றவைகள் மிக அருமையாக இருந்தது. பூங்காவானது நேற்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோரால் நீலகிரி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அரசு அதிகாரிகளால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் பூங்காவிற்கு சுற்றுலா வந்த மக்களின் அவசர நிலைக்கு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு அவசர ஊதிகளும் (ambulances) பூங்காவை சுற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தீயணைப்பு துறையினரும் பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் முக்கியமாக பூங்காவில் பணிபுரிந்த அனைத்து நபர்களுக்கும் மூன்று நேரங்களும் சுவையான உணவுகள் திருமதி. உஷா பிராங்கிளின் தலைமையில் தன்னார்வலர்களால் சமைத்து பரிமாறப்பட்டது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் நகர செய்தியாளர் கிருஷ்ணா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad