பந்தலூரை அடுத்துள்ள அய்யன்கொல்லி பகுதியில் வீட்டின் முன் விரிசல் ஏற்பட்டுள்ளதால் தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை ...
நீலகிரி மாவட்டம் கூடலூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு ஆண்டுகளாக பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் ஆங்காங்கே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பாவங்கள் இடிந்து சேதமடைந்து ஏராளமான வாழைகளும் சேதமடைந்தது. இதனால் நீலகிரியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அந்த வகையில் பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே குழிகடவு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சென்று வர நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு கடந்த ஆண்டுகளுக்கு முன் பெய்த கன மழை காரணமாக வீட்டிற்கு முன்பாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார் அப்பகுதியில் வசித்து வரும் மணிகண்டன். மேலும் இதனால் இவரது வீடும் இடியும் நிலையில் உள்ளதாகவும் எனவே தற்போது விரைந்து இதற்கு தடுப்பு சுவர் அமைத்து நடவடிக்கை எடுக்காவிட்டால் நடப்பாண்டு பெய்யும் மழையில் சாலை துண்டிக்கபடும் அபாயம் ஏற்படும் என்றும் இதனால் ஆட்டோ பைக் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வர முடியாத நிலை ஏற்படுவதோடு மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்களும் பெரிதும் பாதிக்கபடுவர். இது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் நடவடிக்கையும் எடுக்கபடாத நிலையில் நடப்பு ஆண்டு திமுக ஆட்சியில் ஆவது நடப்பாண்டு மழை துவங்கும் முன் சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment