ஊட்டி 200 ஆன வரலாறும் நீலகிரியை உருவாக்கியவரின் 5-ம் தலைமுறை வருகையும்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 May 2023

ஊட்டி 200 ஆன வரலாறும் நீலகிரியை உருவாக்கியவரின் 5-ம் தலைமுறை வருகையும்...

 


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1818 ஆம் ஆண்டு கோயமுத்தூர் கலெக்டராக இருந்த  ஜான் சல்லிவன் அவர்கள் தனது அதிகார எல்லைகளை பார்வையிட்டு வந்தார் அப்போது தொலை நோக்கியில் மேலை ஒருமலை இருப்பதை பார்த்து அந்த மலையில் என்ன உள்ளது என்ற ஆவலில் தனது உதவியாளர்கள் உதவியுடன் மிகவும் சிரமத்துடன் கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு ஊருக்கு வந்தார் அங்கே படுகரின மக்கள் வசிப்பதை பார்த்தார் அவர்களின் உபசரிப்பில் மகிழ்ந்த அவர் அங்கேயே முகாம் அலுவலகம் அமைத்தார் மலைப்பகுதியில் மேலும்  பழங்குடிகள் இருப்பதை அறிந்து 1822 வரை நான்கு ஆண்டுகள் கன்னேரிமுக்கு ஊரில் தங்கி  எல்லையை விரிவுபடுத்தி 1823 ஆம் ஆண்டு நிர்வாக ரீதியாக  ஊட்டியில் தலைமையிடமாக கொண்டு கலெக்டர் அலுவலகம் அமைத்து நீலகிரி மாவட்டம் உருவாக்கினார்

அதனால் 2023 ஆம் ஆண்டு ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் ஆனது 

கன்னேரிமுக்கு ஊரில் அவர் வசித்த இடம் தமிழக அரசால் சீரமைக்கப்பட்டு நினைவு இல்லமாக உள்ளது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிடுகின்றனர் அவர் கலெக்டராக இருந்தபொழுது ஆற்றிய சேவையை நினைவுகூறும் வகையில் கன்னேரிமுக்கு ஊரில் ஜான் சல்லிவன் நினைவு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது...

லண்டனில் இருந்து உதகை 200 நிறைவு விழாவுக்கு ஜான் சலீவனின் எள்ளு பேரன், பேத்தி ஓரன் சலீவன், ஜோஸ்லீன் சலீவன் ஆகியோர் உதகை வந்துள்ளனர். ஜான் சலீவனின் ஐந்தாம் தலைமுறையான இவர்களை நீலகிரி எம்பி ஆ.ராசா அவர்கள் நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தைலம், தேயிலை தூள் ,தேன் போன்ற பொருட்களை நினைவு பரிசாக வழங்கி உதகை தமிழக மாளிகையில்  கௌரவித்தார்.உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் .


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad