குன்னூரில் உயிருக்கு போராடிய காட்டுமாடு... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 May 2023

குன்னூரில் உயிருக்கு போராடிய காட்டுமாடு...

 


குன்னூரில் உயிருக்கு போராடிய காட்டுமாடு


குன்னூர் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் கால்வாய்க்குள் தவறி விழுந்த காட்டு மாடு சுமார் 3 மணி நேரம் போராடி குன்னூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக.  மீட்டனர்...


நேற்றைய தினம் இதேபோன்று ஒரு காட்டு மாடு ஒன்று குன்னூர் பேருந்து நிலையத்தில் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர் அந்த நேரத்தில் அங்கு பணியில் வந்த போக்குவரத்து காவலர் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி அந்த காட்டு மாட்டை விரட்டியதால் அந்த போக்குவரத்து காவலருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இன்று ஒரு காட்டுமாடு அதே குன்னூர் பகுதிக்கு அருகாமையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் கால்வாயில் ஒரு காட்டு மாடு சிக்கி இருப்பது குன்னூர் பகுதியில் ஆங்காங்கே காட்டு மாடுகள் உலா வருவதற்கு ஒரு சாட்சியாக அமைந்துள்ளது...


 இந்த காட்டு மாடுகளை ஊருக்குள் போகாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் கிருஷ்ணா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:

Post a Comment

Post Top Ad