போதை பொருள் தடுப்பு குழு அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 May 2023

போதை பொருள் தடுப்பு குழு அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம்

 


பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் போதை பொருள் தடுப்பு குழு அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பள்ளி முதுகலை ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மரு.கணேசன், காவல் ஆய்வாளர் அமுதா, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.  காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேசும்போது

தேவாலா காவல் உட்கோட்ட பகுதிகளில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை பல கட்டமாக மேற்கொள்ள பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் போதை தடுப்பு குழுக்கள் அமைக்க படுகிறது.  அதுபோல கிராமங்களில் தன்னார்வலர்கள் முக்கிய பிரதிநிதிகள் சேர்த்து கிராம போதை தடுப்பு குழுக்கள் அமைக்க படுகிறது.  கடந்த ஆண்டுகளில் சுமார் 118 போதை சம்பந்தமான வழக்குகள் பதிவாகியுள்ளது.  மேலும் போதை பொருட்கள் கஞ்சா உள்ளிட்டவை மக்களிடையே பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் வருங்கால சமுதாயம் அழிவு பாதைக்கு செல்கிறது. மேலும் கலாச்சார பதிப்புகளும் சமூக வளர்ச்சி பாதிப்பும் ஏற்படுகிறது.  கஞ்சா போன்ற போதைகளுக்கு அடிமையானவர்கள் எளிதில் குற்றசெயல்களை செய்கின்றனர். இதனால் இவற்றை தடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளோம். இந்த குழுவினர் போதை பொருட்கள் விற்பனை செய்வது, போதைக்கு அடிமையானவர்கள், போதையில் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கபடும் யாரும் பயப்பட வேண்டியதில்லை. போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்க நடவடிக்கை எடுக்க படும். மேலும் போதையில் அடிமையானவர்கள் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். மக்கள் ஒத்துழைப்பு தந்தால் போதை பொருள் பரவலை தடுக்க முடியும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் செந்தில், ஸ்டீபன்சன், கவுன்சிலர்கள் சாந்தி, பன்னீர்செல்வம், ரமேஷ், காவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad