கூடலூரில் 10 வது வாசனை திரவிய கண்காட்சியை சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்,
இக்கண்காட்சியின் சிறப்பம்சமாக ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவண படத்தில் நடித்த கதாநாயகர்களான பொம்மன்,பெள்ளி மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள ரகு, பொம்மி போன்று வாசனை திரவிய பொருட்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட உருவங்கள் முன்பு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்...
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடைக்காலங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கோடை விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு இந்த ஆண்டு கடந்த மே 6ம் தேதி கோத்தகிரியில் கோடைவிழாவின் முதல் நிகழ்ச்சியாக 12 வது காய்கறி கண்காட்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, இன்று கூடலூரில் 10 வது வாசனை திரவிய கண்காட்சி துவக்கியது. இந்த வாசனை திரவிய கண்காட்சியை சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியானது இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வாசனை திரவிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 16 வகையான வாசனை திரவிய நறுமண பொருட்கள் வடிவமைக்கப்பட்ட நுழைவு வாயில் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
மேலும் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் கதாநாயகர்களான பழங்குடியின யானை பாகன்கலான பொம்மன், பெள்ளி தம்பதியினரை கௌரவப் படுத்தும் வகையில் அவர்களின் உருவ படத்துடன் 95 எடை கொண்ட அன்னாச்சி பூ,மாராட்டி மொக்கு, ஏலம், கிராம்பு, சோம்பு, கருஞ்சீரகம்,ஜாதி பத்திரி, குருமிளகு, உள்ளிட்ட பதிமூன்று வாசனை திரவிய பொருட்களை கொண்டு ரகு, பொம்மி யானைகள் உருவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலா பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5000 பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு மீன் வடிவமும், பேரூராட்சிகளின் மூலம் வாகன டயர், வீணாகும் பொருட்களில் இருந்து கலைப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் மீண்டும் மஞ்சள் பை போன்ற காட்சி அரங்குகள்,வனத்துறை மூலம் பதப்படுத்தப்பட்ட கரடி, சிறுத்தை, குரங்கு, நீலகிரி வரையாடு விலங்குகளை கொண்ட காட்சி அரங்குகள் வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் காட்சிபடுத்தப்பட்டு உள்ளது. இவற்றை காண வரும் சுற்றுலா பயணிகள் காட்சியரங்குகளை பார்வையிட்டு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment