அரசு போக்குவரத்து கழகத்தின் அவல நிலை ரயில் பயணம் போல அனுபவம் தரும் அரசு பேருந்துகள் பராமரிப்பு இல்லாத பேருந்துகள் கண்டுகொள்ளாத போக்குவரத்துக் கழக அதிகாரிகள்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் முதல் மாங்கோடு வரை இயக்கப்படும் அரசு பேருந்தின் இருக்கைகள் தடதட என ஆடும் சூழ்நிலையில் உள்ளது அதேபோல் மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் எதுவும் இல்லாமல் மாட்டு வண்டி போல் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளது,
இந்நிலையில் கூடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் கொஞ்சம் கூட பராமரிப்பில்லாத பேருந்து நிலைய சாலையில் இயக்க யார் அனுமதி கொடுத்தது கூடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் இதைக் கண்டு கொள்ளாமல் விடுவதன் காரணம் என்ன அரசு பேருந்துகளுக்கும் வருடத்திற்கு ஒருமுறை தகுதி சான்று தரச் சான்று பெற வேண்டும் இந்நிலையில் தரமே இல்லாத பேருந்துகள் இயக்கப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனவே கூடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் இதனை ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும் என்பது கூடலூர் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் ராஜா மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment