பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் திமுக கழக கொடியினை ஏற்றி பல்வேரு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 April 2023

பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் திமுக கழக கொடியினை ஏற்றி பல்வேரு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்...

 


கூடலூர் பந்தலூர் பகுதிகளில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் திமுக கழக கொடியினை ஏற்றி பல்வேரு நலத்திட்ட உதவிகளை செய்தார் இவரின் வருகையால்  தன மக்கள் மகிழ்ச்சி...


தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மு க ஸ்டாலின் ஏற்படுத்திய அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவ மாணவருக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்திற்கு கட்டிடம் கட்ட ஆ.ராசா எம்பி அவர்கள் அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முழுவதும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்ததால் தற்போது அந்தத் திட்டம் தமிழக முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான அரசு ஆரம்பப் பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது..


 இந்நிலையில் பந்தலூர் அடுத்துள்ள அத்திக்குன்னா அரசு ஆரம்பப்பள்ளி காலை சிற்றுண்டி உணவு சமைப்பதற்கான கட்டிடத்திற்கு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டினர் .மேலும்  நிகழ்ச்சியில் நெல்லியால நகராட்சி சார்பில் 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டிடம் கட்டுவதற்கு பணி நடைபெறவுள்ளது .

 நிகழ்ச்சிக்கு நெல்லியாளர் நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கினார் நகராட்சி மன்ற தலைவி சிவகாமி மாவட்ட  விவசாய தொழில் அணி அமைப்பாளர் ஆலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  .


 மேலும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர்,மாண்புமிகு ஆ.ராசா பந்தலூர் மேற்கு ஒன்றியம் கொளப்பள்ளி அண்ணா நகர் முதல் சேரங்கோடு பஜார் வரை ரூ.4.85 கோடி மதிப்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சாலை அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  கூடலூர் ஒன்றியம் புளியம் பாறை ,மஞ்சமூலா,பாடந்துறை

மண்வயல் பகுதியில் நடைபெற்றது.

 கழக துணை பொதுச் செயலாளர், மாண்புமிகு

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள் கலந்து கொண்டு

கழக கொடியேற்றி, நலத்திட்ட

உதவிகள் வழங்கி சிறப்புரை

ஆற்றினார்.

யானை தாக்கி இறந்த

கல்யாணி குடும்பத்திற்கு

தன் சொந்த நிதியாக 1லட்சம் ரூபாய் மற்றும் காயம் அடைந்த

வர்களுக்கும், மருத்துவ சிகிச்சைக்கு தலா ரூபாய் 10000

வழங்கினார்.

  ஆலவயல் பகுதியில்

தேர்தல் மோதலில் இறந்த

சபீர் மற்றும் காயம் அடைந்த

அஸ்கர் குடும்பத்திற்கு தலா 

ரூபாய் 25000 வழங்கி,

சபீர் குழந்தைகள் கல்வி

செலவையும் ஏற்பதாக 

அறிவித்தார்.


நிகழ்ச்சியில் மாவட்ட கழகச் செயலாளர் நீலமலையின் ஆற்றல் மிகு  செயலாளர் அண்ணன் பா.மூ முபாரக், ,மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார்,  முன்னால் கூடலூர் சட்ட மன்ற உறுப்பினர் .திராவிடமணி, பந்தலூர் மேற்கு ஒன்றிய  செயலாளர் சிவானந்த ராஜா,கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ்,நகர செயலாளர் சேகரன், நீலகிரி பார் கவுன்சில் தலைவர் சந்திரபோஸ்,முன்னால் மாவட்ட ஊராட்சி தலைவர் கோமதி, துணை செயலாளர் குழந்தைவேல்,நீலகிரி மாவட்ட  விவசாயதொழில் அணி அமைப்பாளர் எம்பிஆழன்.,மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் முரளி.

 மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் செந்தில், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவசங்கர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ்,  ஒன்றிய குழு உறுப்பினர் பத்மினி, பள்ளி தலைமை ஆசிரியர் பாப்பாத்தி

வார்டு உறுப்பினர் கலைமணி மற்றும் கழக இனை செயலாளர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள.நகராட்சி உறுப்பினர்கள் கழைகிளக நிர்வாகிகள்.பொருலாளர்கள்.மாணவர் அணி வர்த்தக அணி மகளீர் அணி ..கட்சி உறுப்பினர்கள் தொண்டர்கள் பொது மக்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் ராஜா மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad