மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் கும்மாளம்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 April 2023

மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் கும்மாளம்...


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி செல்லும் சாலையில் தமிழ்நாடு வனக்கல்லூரி அமைந்துள்ளது சமவெளி பகுதியிலிருந்து மலை பாதை ஆரம்பிக்கும் இடம் வரை உள்ள சாலையானது நேர்த்தியாகவும் நிழல் தரும் மரங்கள் சூழ ரம்மியமாக காட்சியளிக்கிறது.




 முன்பெல்லாம் கீழிறங்கும் வாகனங்கள் சமவெளி பகுதி வந்தவுடன் பிரேக் டிரம் சூடு இறங்கும் வரை வாகனத்தை நிறுத்தி சற்று இளைப்பாறிச்செல்வதும் மேலே செல்லும் வாகன ஓட்டிகள் வெயிலில் வந்த களைப்பு நீங்க மர நிழலில் ஓய்வெடுத்து செல்வது வழக்கம் அந்த சமயங்களில் உணவருந்தும் மக்கள்     
கழிவுகளை வனத்தை ஒட்டிய சாலையோரம் வீசிச் சென்றனர் அதனால்  பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது
 தற்பொழுது  வனச்சட்டம் கடுமையாக்கப்பட்டதாலும் வனக்கல்லூரி அருகே வனவிலங்குகள் சாலையை கடக்கும் பகுதியானதினால் விபத்து ஏற்படாத வண்ணம் வேகத்தடைகள் அமைக்கப்பட்டது மாலை நேரங்களில் மேட்டுப்பாளையம் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்
வனக்கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் தொண்டு நிறுவனத்தினர் தன்னார்வலர்கள் இணைந்து சாலையோரம் கிடந்த டன் கணக்கில் குப்பைகளை அகற்றினர் அதையும் மீறி வரும் குப்பைகளை வனத்துறையினர்  அவ்வப்போது அகற்றுகின்றனர் 
இப்போது மக்கள் எந்த ஒரு கட்டுப்பாடுகளை கண்டுக்கொள்வதில்லை என்றும் இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் சோதனைசாவடிகளில் ஆளில்லாத நேரத்தில் அதிக குப்பைகளை வீசிச்செல்வதாக குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்த வனக்காவலர் அக்கீம் தலைமையிலான குழுவினர் வருத்தம் தெரிவித்தனர் எவ்வளவு சுத்தம் செய்தாலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அதிக குப்பை சேர்வதால் தங்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்படுவதாக கூறினார்கள்
தன்னார்வலர்கள் கூறுகையில் பொதுமக்கள் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சோதனை சாவடிகளில் சோதனையை பலப்படுத்தி கண்கானிப்பு கேமரா அமைத்து கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என இயற்கை விரும்பிகள் தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் எதிர்பார்ப்பாக உள்ளது

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad