உலக சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடைவிழா மற்றும் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி கூடலூரில் வாசனைதிரவிய கண்காட்சி ஊட்டியில் மலர் கண்காட்சி குன்னூரில் பழக்கண்காட்சி மற்றும் பழங்குடியினரின் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெறும்
தற்பொழுது சித்திரை மாத வெயிலின் தாக்கம் ஆரம்பித்ததால் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிந்து வருகின்றனர் எனவே மாவட்ட நிர்வாகம் வாகன நெரிசலை கட்டுப்படுத்த ஏப்ரல் மாதம் 15 ம்தேதி முதல் மாதம் முழுவதும் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு மட்டும் மலைப்பாதையை ஒருவழி பாதையாக அறிவித்தது மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வழியாக ஊட்டி செல்லும் வாகனங்கள் சமவெளிப் பகுதிக்கு செல்ல கோத்தகிரி வழியாக செல்ல ஒருவழிபாதையாக மாற்றப்பட்டது
கோத்தகிரி பகுதியில் ஏற்கெனவே வாகன நெரிசல் உள்ள நிலையில் தற்பொழுது வரும் அதிகப்படியான வாகனங்களை கட்டுபடுத்தி போக்குவரத்தை சீரமைப்பது சவாலான பணியாகும் கோத்தகிரி காவல் ஆய்வாளர் திரு.வேல்முருகன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும்
கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள திரு. பதி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. பிலிப்ஸ் சார்லஸ் அவர்களும் போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருடன் இணைந்து கோத்தகிரி கட்டபெட்டு முதல் குஞ்சப்பனையை தாண்டி சனி ஞாயிறு ஒருவழிபாதை பணியை சிறப்பாக செய்தனர் வாகனங்கள் எந்தவிதமான சிரமமுமின்றி சென்றது
இந்த சிறப்பான பணிக்கு தமிழக குரல் செய்தி நிறுவனத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம் தொடரட்டும் தங்களின் சிறப்பு பணி
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment