நெடுகுளா ஆடுகொட்டகை மாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலம்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 April 2023

நெடுகுளா ஆடுகொட்டகை மாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலம்...

 


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ளது  நெடுகுளா கிராமம் இங்கு இருநூற்றான்றுக்கு முன் அமைந்த பழமை வாய்ந்த ஆடுகொட்டகை மாரியம்மன் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது .

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு நெடுகுளா ஊரில் வசித்த படுக பழங்குடியின மக்கள் தங்களுக்கு சொந்தமான மலைப்பகுதியில் விவசாயம் செய்து வந்தனர் அப்போது கால்நடை பராமரிப்பில் ஆடுகளை வளர்த்து வந்தனர் ஆடுகளுக்கான பட்டியை படுக மொழியில் கொட்டகை என அழைப்பர் ஆடுகளை வனவிளங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டி மாரியம்மனுக்கு சுத்தகல் அமைத்து வழிபட்டு வந்தனர். நான்கைந்து பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த இடத்தில் மாரியம்மனுக்கு கோயில் கட்டி நூற்றாண்டு காலமாக கொட்டகை மாரியம்மன் கோயில் வருடாந்திர திருவிழா நடத்துகின்றனர்.

இந்த ஆண்டு மலை மேல் அமைந்துள்ள 200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமைவாய்ந்த ஆடுகொட்டகை மாரியம்மன்  திருவிழாவில் நெடுகுளா மக்களும் பெண் எடுத்தவர்களும் பெண் கொடுத்தவர்களும் கலந்துகொண்டு அம்மனின் அருளாசி பெற்றனர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படுக பாரம்பரிய நடனமாடினர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad