கூடலூர் படந்துறை தேவர்சோலை பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்து வரும் கனமழையின் காரணமாக தேவர்சோலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பழமையான மரம் சாய்ந்து விழுந்தது. அதுபோல அப்பகுதியில் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. தகவல் அறிந்த மின்வாரியத்தின் மின்சார விநியோகத்தை நிறுத்தி மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பலத்த காற்றினால் வாழைகளும் உடைந்து சேதமடைந்துள்ளன.இதுபோல்விலங்கூர் பகுதியில் மூங்கில் மரம் அடியோடு சாய்ந்தது இதனால் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்தது இந்த மழையால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment