கூடலூர் நாடார் திருமண மண்டபத்தில் கல்வி கண்காட்சி
நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடார் திருமண மண்டபத்தில் கல்வி கண்காட்சி நடைபெற்றது. நெல்லை தொலைக்காட்சி, ராகம் தொலைக்காட்சி மற்றும் ஒமேகா ஈவெண்ட் ஆகியன இணைந்து நடத்திய கல்வி காட்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக SNR & சன்ஸ் ட்ரஸ்ட் ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இன்ஸ்டிட்டியூஷன் டாக்டர்.பிரகதீஸ்வரன் மற்றும் நீலகிரி காலேஜ் செயலாளர் ராசித் கஸ்சலி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியானது அவர்களால் துவக்கி வைக்கபட்டது.
தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கபட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கிய நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மேலும் இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் கூறுகையில், +2 படிப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம் எதை தேர்வு செய்வது என தெரியாமல் இருந்த நிலையில் இந்த கல்வி கண்காட்சியால் குழப்பமான நிலை மாறியுள்ளது. எந்தெந்த துறை எடுத்தால் என்ன ஆகலாம் என தெளிவான பதில் கிடைத்தது. மேலும் இந்த நிகழ்வு பின்தங்கிய மாணவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்விற்கு தலைமை வகித்த ஒமேகா ஈவென்ட் வெங்கடேஷ் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...





No comments:
Post a Comment