நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குஞ்சப்பனை அருகே கோழிக்கரை, செம்மனாரை, கீழ்கூப்பு உள்பட ஏராளமான பழங்குடியின கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களுக்கு பஸ் வசதியில்லாததால், கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக குஞ்சப்பனைக்கு பல கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று, அங்கிருந்து அரசு பஸ்கள் மூலம் கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே தங்களது கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பழங்குடியின மக்கள் அதிகாரிகளை வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து குஞ்சப்பனையில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்மனாரைக்கு கடந்த மாதம் 5 ம் தேதி அரசு பஸ் மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அந்த வழித்தடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்கள் அகற்றப்பட்டு, ஒரு சில பகுதிகளில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன. மேலும் இந்த வழித்தடத்தில் அரசு பஸ் ஒரு நாளைக்கு 3 முறை இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் ஏப்ரல் 16 ஞாயிறு அன்று நீலகிரி தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர் ராசா, மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் ஆகியோர் கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து செம்மனாரைக்கு அரசு பஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர். அந்த பஸ் செம்மனாரையை சென்று அடைந்ததும் கிராம மக்கள் தங்களது பாரம்பரிய இசை முழங்க அரசு பஸ்ஸின் முன் தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment