நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பாலத்து அருகாமையில் வீற்றிருக்கக்கூடிய ஸ்ரீ பால நாக முத்து மாரியம்மன் கோவில் திருவிழா ஐந்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் முதல் நாள் காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழா முளைப்பாரி ஊர்வலம் பின்னர் அம்மனுக்கு மாங்கல்யம் அணிவித்தல் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து மகா அன்னதானமும் நடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக அம்மனுக்கு பூங்கரகம் மற்றும் திருத்தேர் பால்குடம் தீர்த்த குடம் அக்னி சட்டி ஊர்வலமானது கோத்தகண்டி மட்டம் மகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இருந்து சிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
மூன்றாம் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக மாவிளக்கு பூஜை ஆனது நடைபெற்றது இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிரும் ஒரே நிறத்திலான ஆடைகளை அணிந்திருந்தது பார்ப்பவர்களின் கண்களை கவரும் வண்ணம் இருந்தது.
அதிலும் குறிப்பாக மும்மதத்தினரும் ஒரே நிற ஆடை அணிந்து மத நல்லிணக்கத்தோடு கலந்து கொண்டது இன்னும் சிறப்பு அளிக்கும் விதமாக இருந்தது அதனைத் தொடர்ந்து அம்மனின் அருள் பிரசாதமான அன்னதானம் வழங்கப்பட்டது.
நான்காம் நாள் திருவிழாவாக குழந்தைகளுக்கான மியூசிக்கல் சேர் மற்றும் உறியடி வழுக்கு மரம் என கலை நிகழ்ச்சிகளுடன் கலை கட்டிய திருவிழா மதியத்திற்கு மேல் அம்மனின் பூங்கரகம் குடிவிடுதல் நிகழ்வுடன் நிறைவு பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஐந்தாம் நாள் விழாவாக காலையில் அம்மனுக்கு மறு பூஜை அதனைத் தொடர்ந்து மகா முனியப்பன் ஆலயத்தில் கிடா வெட்டு பூஜை நடைபெற்றது இதில் இந்த ஐந்து நாட்களும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் ஆண்டு விழாவை மென்மேலும் சிறப்பித்தனர்.
இந்த ஐந்து நாட்களும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஒற்றுமையாக ஆலயத்திற்கு வந்திருந்து இந்த பூஜைகளை சிறப்பித்தது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் விழ வைத்தது மேலும் இந்த ஐந்து நாட்களும் விழாவின் போது பக்தர்களின் கூட்டம் குறையாமல் திரளாகவே இருந்தது பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக இருந்தது.
மேலும் இந்த ஆலய விழாவின்போது ஒலி ஒளி அமைப்பில் இந்து முஸ்லீம் கிறிஸ்தவர் என மும்மத குறிகளையும் ஒரு பதாகையில் வைத்து ஆலயத்திற்கு முன்பாக வைத்திருந்தனர் இது இப்பகுதியில் ஒற்றுமையை பறை சாற்றும் முறையில் இருந்தது இதை பார்த்த அனைவரும் மத நல்லிணக்கத்தை ஒன்று படுத்தும் விதமாக இந்த திருவிழா அமைந்திருந்ததாக கூறினர். இப்படி ஒற்றுமையாக நடைபெற்ற இந்த விழாவினை ஒருசேர நடத்திய விழா குழுவினரை அனைத்து பொதுமக்களும் பாராட்டினார்கள்.
அவர்களுடன் சேர்ந்து தமிழக குரல் செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கும் விழா குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...










.jpg)

No comments:
Post a Comment